கணவருக்காக மதம் மாறினாரா 'குக் வித் கோமாளி' மணிமேகலை.. 'லவ் ஜிகாத்' உண்மை என்ன?
தொகுப்பாளினி மணிமேகலை இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவரும் மதம் மாறிவிட்டதாக கூறி 'லவ் ஜிகாத்' பாஜகவினர் கூறி வந்த நிலையில், இந்த பதிவுக்கு அன்றே பதிலளித்து முற்று புள்ளி வந்த பதிவு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளவர் மணிமேகலை. முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், சன் டிவி நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இவர்களின் காதல் திருமணத்தை, இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், இருவருமே தன்னந்தனியாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினர். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளிகளில் ஒருவராக என்ட்ரி கொடுத்த மணிமேகலை தன்னுடைய கலகலப்பான காமெடியால், பல ரசிகர்களைசிரிக்க வைத்து வந்தார்.
தற்போது இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தாண்டி தன்னுடைய யூடியூப் சேனல் மற்றும் பட்டிமன்றம், திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குவது போன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் இவர், திடீரென கடந்த மாதம் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இவரின் முடிவு பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கான பல்வேறு காரணங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது. ஆனால் ஏன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பதை மணிமேகலை வெளிப்படையாக கூறாத நிலையில், தற்போது வழக்கம் போல் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் மணிமேகலை கடந்த 2020 ஆம் ஆண்டு, ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஈக் முபாரக் என பதிவு ஒன்றை போட்டு, தலையில் முக்காடு போட்டிருப்பது போல் போஸ் கொடுத்து "முன்னாடி எல்லாம், நான் எல்லோர் கிட்டையும் பிரியாணி கேட்பேன் ரம்ஜானுக்கு, இப்போ எல்லோரும் என்கிட்ட பிரியாணி கேக்குறாங்க ஒரே நகைச்சுவையா இருக்கு போ... என்று பதிவிட்டிருந்தார்.
இதனை தற்போது பாஜகவை சேர்ந்த சிலர், 'லவ் ஜிகாத்' என கூறி, மணிமேகலை மதம் மாறிவிட்டதாக கூறிய இருந்தனர். இது போன்ற மதம் மாறிய சர்ச்சை அப்போது எழுந்த போது.. "ஹேப்பி ரம்ஜான் சொல்றதுக்கு எல்லாம் மதம் மாறித்தான் சொல்லனுமா? யாரும் இங்க கான்வென்ட் ஆகல ஹுசைன் தன்னுடன் கோவிலுக்கு வருவார், அதே போல் நான் அவருடன் ரம்ஜான் கொண்டாடுவேன். நாங்க இரண்டு பேருமே மிகவும் தெளிவாக இருக்கிறோம். உங்க கன்ஃபியூஷனை இங்க கொண்டு வராதீங்க என பதிலடி கொடுத்திருந்தார்.
இதன் மூலம் மணிமேகலை மதம் மாறியதாக கூறப்படுவது உண்மை இல்லை என்பது தெளிவாகி உள்ளது. அதே போல் அந்த பழைய புகைப்படம் தான் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.