சைடு போஸில் சாச்சிட்டாலே.. கேரள புடவையில்... சும்மா கும்முனு போஸ் கொடுத்து கிக் ஏற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கேரள புடவை கட்டி... மிதமான மேக்கப்புடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு முன்பே சின்னத்திரைகள் இருந்து வெள்ளி திரைக்குள் காலடி எடுத்து வைத்து, தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வளர்ந்து வரும் பல இளம் கதாநாயகிகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் கூட, தைரியமாக ஏற்று நடித்து தன்னுடைய வெற்றியை உறுதி செய்த ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து தன்னுடைய வெற்றியை உறுதி செய்து வருகிறார்.
கணவருக்காக மதம் மாறினாரா 'குக் வித் கோமாளி' மணிமேகலை.. 'லவ் ஜிகாத்' உண்மை என்ன?
இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது 'காக்கா முட்டை' படம் தான், இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக ஒரு பக்கம் மிகவும் பிசியாக நடித்து வந்த இவர், மற்றொரு பக்கம் கனா, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன்,,தி கிரேட் இந்தியன் கிச்சன், போன்ற படங்களில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றார்.
மேலும் திரைப்படங்களை தாண்டி அவ்வப்போது சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவிட்டு... ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் கண்ணை கவரும் அழகில் கேரளத்து புடவை கட்டு கும்முனு கிக் ஏற்றும் சைடு போஸில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.