அஜித்தின் வேதாளத்தை நம்பி அதள பாதாளத்தில் விழுந்த சிரஞ்சீவி... போலா ஷங்கர் படத்துக்கு வாங்கிய சம்பளமும் போச்சு
ஜெயிலர் படத்துக்கு போட்டியாக ஆந்திராவில் ரிலீஸ் ஆன போலா ஷங்கர் திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் சம்பளத்தை திருப்பி கொடுத்துள்ளார் சிரஞ்சீவி.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் வேதாளம். கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை வாரிக் குவித்தது. இப்படி கலவையான விமர்சனங்களை சந்தித்த வேதாளம் படத்தை தெலுங்கில் போலா ஷங்கர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்து உள்ளார்.
வேதாளம் படம் தங்கச்சி செண்டிமெண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். அப்படம் ஓரளவுக்கு வெற்றியை பெற அஜித் - லட்சுமி மேனன் இடையேயான தங்கச்சி செண்டிமெண்டும் ஒரு காரணம். அதேபோல் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். கீர்த்திக்கும் தங்கச்சி கேரக்டர் செட் ஆகாத ஒன்று என்பதை இப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஷங்கர் மகளுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... சைலண்டாக சூர்யா பட வாய்ப்பை தட்டிதூக்கிய அதிதி!
ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினிகாந்துக்கு தங்கச்சியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது போலா ஷங்கரும் அந்த தோல்வி பட்டியலில் இணைந்துள்ளதால், அவரை ராசியில்லாத தங்கச்சி என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். போலா ஷங்கர் படு தோல்வி அடைந்ததற்கு மோசமான திரைக்கதையும் கிரிஞ்சான காட்சிகளும் தான் காரணம் என விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Bholaa shankar, Jailer
ஆந்திராவில் 850 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன போலா ஷங்கருக்கான தியேட்டர் எண்ணிக்கை அடுத்த வாரமே 150 ஆக குறைக்கப்பட்டது. மறுபுறம் இதற்கு போட்டியாக 500 தியேட்டரில் ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்துக்கான தியேட்டர் எண்ணிக்கை தற்போது 650 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது போலா ஷங்கர்.
Bholaa shankar, Jailer
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போலா ஷங்கர் திரைப்படம் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளதால், தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் இப்படத்திற்காக வாங்கிய ரூ.65 கோடி சம்பளத்தில் இருந்து ரூ.10 கோடியை திரும்ப கொடுத்துள்ளாராம் சிரஞ்சீவி. அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... நான் ஸ்டாப் வசூல் வேட்டை... பொன்னியின் செல்வன் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ஜெயிலர்