MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷங்கர் மகளுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... சைலண்டாக சூர்யா பட வாய்ப்பை தட்டிதூக்கிய அதிதி!

ஷங்கர் மகளுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... சைலண்டாக சூர்யா பட வாய்ப்பை தட்டிதூக்கிய அதிதி!

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 20 2023, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
aditi shankar

aditi shankar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, கடந்தாண்டு முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கினார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி. விருமன் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து நடிகை அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
aditi shankar

aditi shankar

அந்த வகையில் விருமன் படம் முடித்த கையோடு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட் ஆனார் அதிதி. அப்படமும் கடந்த மாதம் திரைக்கு வந்து மாபெரும் வசூலை வாரிக்குவித்தது. இப்படி தொடர்ந்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அதிதி, தற்போது நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி. இப்படத்தை அஜித்தின் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

இதையும் படியுங்கள்... நான் ஸ்டாப் வசூல் வேட்டை... பொன்னியின் செல்வன் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ஜெயிலர்

34

இதுதவிர ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் அதிதி. இப்படி அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போய் உள்ள அதிதிக்கு அடுத்ததாக ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது தான் சூர்யாவின் 43-வது திரைப்படம். சுதா கொங்கரா இயக்க உள்ள இப்படத்தில் நடிக்க அதிதி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

44
aditi shankar

aditi shankar

இப்படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், இதில் அதிதி யாருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது உறுதியாக தெரியவில்லை. கோலிவுட்டில் அறிமுகமான ஒரே ஆண்டில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை நடிகை அதிதி ஷங்கர் தட்டிதூக்கி வருவதால் டாப் ஹீரோயின்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்... ஏன் கால்ல விழுற... அறிவில்ல உனக்கு! கொந்தளித்த ரஜினியின் காலா பட இயக்குனர் பா.இரஞ்சித் - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chaitra Reddy : கணவரை டைவர்ஸ் செய்தாரா கயல் சீரியல் நடிகை? 6 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போட்டாரா சைத்ரா ரெட்டி?
Recommended image2
Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?
Recommended image3
Siragadikka Aasai : ரோகிணியை மீண்டும் ஏமாற்றும் மனோஜ்... சத்யா-ரேகாவை பிரிக்க சிந்தாமணி போட்ட மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved