நான் ஸ்டாப் வசூல் வேட்டை... பொன்னியின் செல்வன் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
Jailer
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்தது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், ஜெயிலர் திரைப்படம் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. இப்படம் ஒரே வாரத்தில் ரூ.375 கோடி வசூலித்து உலகளவில் மாஸ் காட்டிய நிலையில், தற்போது அப்படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
Jailer
அதன்படி ஜெயிலர் திரைப்படம் 10 நாளில் ரூ.500 கோடி வசூலித்து புது சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதன்மூலம் கடந்தாண்டு வெளியாகி ரூ.500 கோடி வசூலித்து இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை ஜெயிலர் முறியடித்து உள்ளது. இதுவரை ஜெயிலர் திரைப்படம் ரூ.511 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... ஏன் கால்ல விழுற... அறிவில்ல உனக்கு! கொந்தளித்த ரஜினியின் காலா பட இயக்குனர் பா.இரஞ்சித் - வைரலாகும் வீடியோ
Jailer
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் மற்றும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்ததால், இப்படம் அம்மாநிலங்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. கேரளாவில் விக்ரம் படம் 40 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படம் அதனை முறியடித்து கேரளாவில் அதிகம் வசூலித்த தமிழ் படம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
Jailer
இதேபோல் கர்நாடகாவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக 2.0 இருந்து வந்த நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படம் அந்த சாதனையை முறியடித்து மாஸ் காட்டி உள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வரும் ஜெயிலர், அதிக வசூல் குவித்த தமிழ் படம் என்கிற சாதனையை விரைவில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 2.0 திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்ததே சாதனையாக இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... 9 ஆண்டுகளுக்கு பிறகு.. அகிலேஷ் யாதவை சந்தித்த ரஜினிகாந்த் - சூப்பர்ஸ்டாரின் வட இந்தியா விசிட் க்ளிக்ஸ் !!