அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'வாரிசு' திரைப்படம்? எப்போது... வெளியான ரிலீஸ் தேதி!
'வாரிசு' திரைப்படம், வெளியான குறுகிய நாட்களிலேயே சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சமூக வலைத்தளத்தில், தீயாக பரவி வருகிறது.
தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான நிலையில்... வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கிற்கு படையெடுத்து வரும் நிலையில், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டது.
'வாரிசு' படம் இரண்டாவது வாரத்தை எட்டி உள்ள நிலையில், இப்படம் 7 நாட்களிலேயே உலகளவில் 210 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, வெளியிடப்பட்ட தகவல் தான் பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், மற்றும் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் போன்றோர் ஒரு படத்தின் வசூல் பற்றி தெரிந்து கொள்வதற்கு சில நாட்கள் ஆகும், அப்படி இருக்கையில் 'வாரிசு' திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் 210 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவலை எப்படி நம்புவது? என தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, வாரிசு பட குழுவினர் வசூல் குறித்து பொய்த்தகவல்களை வெளியிட்டு வருகிறார்களா? என்கிற சந்தேகத்தையும் எழ வைத்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, வாரிசு திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படும். இதைத்தொடர்ந்து தொலைக்காட்சியிலும் இப்படத்தை ஒளிபரப்ப பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சன் டிவி தொலைக்காட்சியில் 'வாரிசு' திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக சமூக வலைதளத்தில், ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், 'வாரிசு' படம் வெளியான மூன்றே மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.