இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபட்டாரா ராக்கி சாவந்த்? நடிகையின் புகாரில்... திருமணமான பத்தே நாளில் கைது!
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காதலர் அடில் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்ட, ராக்கி சாவந்த் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரை உலகில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் ராக்கி சாவந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், மிகவும் பிரபலமானவர்.
இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக... இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ராக்கி சாவந்த் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
துணிவு படம் பார்க்க விடாததால்... ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அஜித் ரசிகர்
இதைத்தொடர்ந்து அடில் துரானி என்பவருடன் டேட்டிங் செய்து வந்த ராக்கி சாவந்த், தன்னுடைய தாயார் புற்றுநோயால் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காதலனை கரம் பிடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிவுட் திரை உலகில் சர்ச்சை நடிகையாக அறியப்படும் ராக்கி சாவந்த், திருமணமான 10 நாளில் தற்போது பிரபல நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகையான ஷெர்லிங் சோப்ரா, சமீபத்தில் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் ராக்கி சாவந்த், தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் அடிப்படையில் தற்போது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராக்கி சாவந்த்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.