மிஸ் ஆன மிசா... கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருந்த படம் இதுதானா? சீக்ரெட் தகவலை வெளியிட்ட வடிவேலு
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க இருந்த படம் குறித்த சீக்ரெட் தகவலை வடிவேலு வெளியிட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் நடிகராக அவதாரம் எடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றியடைந்த பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, நெஞ்சுக்கு நீதி, கலகத்தலைவன், கண்ணை நம்பாதே என ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்து மாமன்னன் என்கிற படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இவ்வாறு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சராக பொறுப்பேற்றார். இதன்காரணமாக இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்திலும் விலகினார் உதயநிதி. அவரின் கடைசி படமாக மாமன்னன் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் அப்படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக இருந்த படம் என்பது மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது என்ன சம்பவம் என்பதை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தனர். அந்த சீக்ரெட்டை தான் சமீபத்திய பேட்டியில் வடிவேலு உடைத்துள்ளார். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினின் பயோபிக்கை தான் கமல்ஹாசன் படமாக தயாரிக்க இருந்தாராம்.
இதையும் படியுங்கள்... முதல் பாகம் ரூ.500 கோடி வசூலித்து என்ன பிரயோஜனம்... பொன்னியின் செல்வன் 2 படத்தை வாங்க ஆள் இல்லையாம்! இது எங்க?
அதில் உதயநிதி நடித்தால் பொறுத்தமாக இருக்கும் எனக்கருதி, அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். மேலும் அப்படத்திற்கு மிசா என பெயரும் வைத்திருந்தார்களாம். ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் அனுபவித்த கொடுமைகளை மையமாக வைத்து அப்படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த தகவலை மதுரையில் நடைபெற்று வரும் ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் வடிவேலு கூறி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் விலகிவிட்டதால் மிசா திரைப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கும் முயற்சியில் கமல்ஹாசன் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இணைந்து பணியாற்றிய பின்னர் கமலும், விஜய் சேதுபதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டதால், இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Ajith: நடு கடலில்... மனைவி ஷாலினியுடன் போட்டில் படு ஹாட் ரொமான்ஸ் செய்யும் அஜித்! வைரலாகும் போட்டோஸ்..!