Ajith: நடு கடலில்... மனைவி ஷாலினியுடன் போட்டில் படு ஹாட் ரொமான்ஸ் செய்யும் அஜித்! வைரலாகும் போட்டோஸ்..!
அஜித் மற்றும் ஷாலினியின் ஹாட் ரொமான்டிக் போட்டோஸ், சில வற்றை ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட... அது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளான அஜித் - ஷாலினி ஜோடி, தற்போது கடலுக்கு நடுவே போட்டில் இருந்தபடி, ரொமான்ஸ் செய்துள்ள புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருடைய படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் எந்த அளவிற்கு ஆரவாரம் செய்து வரவேற்கின்றனோ... அதே அளவிற்கு இவருடைய திரைப்படங்கள் குறித்த எந்த தகவல் மற்றும் அவருடைய புகைப்படங்கள் வெளியானாலும் அதனை சமூக வலைதளத்தில் வைரலாகி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது அஜித்தின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயம் ஏகே 62 படம் குறித்த அப்டேட் தான். இப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகும் நிலையில், துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு, அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், இப்படத்தில் இருந்து விலகினார். எனவே தற்போது இவருக்கு பதிலாக இப்படத்தை... பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளது உறுதியாகி உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை இப்படத்தை தயாரிக்க உள்ள, லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
ஸ்ருதி ஹாசன் - சித்தார்த் லவ் பிரேக்கப்புக்கு காரணம் சூர்யாவா? இது என்னடா புது புரளியா இருக்கு..!
ஏ கே 62 படம் குறித்த தகவல் தாமதம் ஆகி வருவது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் என்றாலும், அவ்வப்போது அஜித்தின் மனைவி ஷாலினி யாரும் எதிர்பாராத விதமாக, சில அல்டிமேட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகன் ஆத்விக்குடன், கணவர் அஜித் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி... இதை தொடர்ந்து, அஜித்துடன் போட்டில் எடுத்துக்கொண்ட செம ஹாட் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதில் வெள்ளை நிற மேக்சி கவுன் அணிந்து ஷாலினி ஹாலிவுட் ஹீரோயின் போல் ஜொலிக்கிறார். அஜித் பச்சை நிற டீ-ஷர்ட் அணிந்து, கருப்பு நிற கூலிங் கிளாஸ் உடன் மிகவும் ஸ்டைலிஷாக, அமர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.