ஸ்ருதி ஹாசன் - சித்தார்த் லவ் பிரேக்கப்புக்கு காரணம் சூர்யாவா? இது என்னடா புது புரளியா இருக்கு..!
நடிகர் சித்தார்த் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் காதலித்து வந்ததும், பின்னர் பிரேக்கப் செய்து கொண்டனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்களின் பிரேக்கப்புக்கு காரணம் சூர்யா தான் என்கிற புது புரளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் நடிகர் சித்தார்த். பின்னர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்தில் நடித்து, அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மொழி படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த சித்தார்த், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்த போது, உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
குந்தவையின் காதலை மெல்லிசையோடு வெளிப்படுத்தும் 'அக நக' முதல் சிங்கிள் பாடல்! வீடியோ...
பின்னர் ஸ்ருதிஹாசன் தமிழில், ஹீரோயினாக 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்த போது, சூர்யாவுடன் காட்டிய நெருக்கம் தான் சித்தார்த் - ஸ்ருதிஹாசன் பிரிவுக்கு காரணம் என புது புரளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 'ஏழாம் அறிவு' படத்தில் நடித்த போது, ஸ்ருதிஹாசன் - சூர்யாவுடன் அவுட்டிங் சென்றதாகவும், அது பிடிக்காத சித்தார்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எனவே தனக்கு இனி சித்தார்த்துடன் செட்டாகாது என்ற மைண்ட் செட்டுக்கு வந்த ஸ்ருதிஹாசன், சித்தார்த்துடன் பிரேக் அப் செய்தார். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவருமே தங்களுடைய திரையுலக வாழ்க்கையில் மட்டுமின்றி அடுத்தடுத்த காதல் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சித்தார்த் கடந்த 2002-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை செய்த மேக்னா என்கிற பின்னணி பாடகி ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், அவரிடம் இருந்து 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். மனைவி மூலம், சித்தார்த்துக்கு மகன் ஒருவரும் உள்ளார்.
இந்த விவாகரத்துக்குப் பின்னர் தான், ஸ்ருதிஹாசன் உடன் காதல் வயப்பட்டு பிரேக் அப் செய்து கொண்ட பின்னர் சமந்தாவுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது 'காற்று வெளியிடை' படத்தின் நாயகி, அதிதி ராவை காதலித்து வருவதோடு, இவர்கள் இருவரும் மும்பையில் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் ஸ்ருதிஹாசனும் ஒரு சில காதல் விவகாரங்களில் சிக்கிய நிலையில். தற்போது டூன்டூல் கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.