இரண்டு பிரபலத்துடன் நெருக்கம் காட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..? கூட்டி வைத்து கண்டித்தாரா சூப்பர் ஸ்டார்!
நடிகரும் - பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விவாகரத்து குறித்து அறிவித்த பின்னர் இரு பிரபலங்களுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி, ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்பவர் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் கூட, கடந்தாண்டு கணவரை இழந்த நடிகை மீனாவும், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் விவாகரத்தை அறிவித்த தனுஷும், திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கொளுத்தி போட்டார் பயில்வான் ரங்கநாதன்.
இது குறித்து பேசியபோது இருவரும், இளமையானவர்கள் என்பதால் பாடி டிமாண்ட் இருக்கும்... எனவே அவர்கள் திருமணம் செய்து கொள்வது தவறில்லை என பேசியதற்கு.. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்தனர். அதே நேரம் மீனா - ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமானவர். அப்பா - மகள் போல் இருவரும் பழகி வருவதால், தனுஷை மீனா திருமணம் செய்து கொள்ள வாய்ப்பில்லை. எனவே இப்படி வெளியாகும் தகவல், வதந்தியாக கூட இருக்கக்கூடும் என பட்டும் படாமல் பேசியதற்கே சமூக வலைதளத்தில் பலர் பயில்வானை வச்சு செய்தனர்.
இவர்கள் குறித்து பேசிய பின்னர், தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசினார். அப்போது தனுஷை விட்டு.. ஐஸ்வர்யா பிரிந்த பின்னர், இரண்டு பிள்ளைகள் தனக்கு இருக்கிறார்கள் என்று கூட நினைக்காமல் ஜிம்மில், கவர்ச்சிகரமான தோற்றத்தில் தொடை தெரியும் படி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடிக்கடி அனிருத்தின் ஆபிசுக்கு போய் வருகிறார் என்று கேள்விப்பட்ட ரஜினி அவரை அழைத்து கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோல், பிரபல நடன இயக்குனர்... பிரபு தேவாவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும், தகவல் வெளியாகி வருவதாக கொளுத்தி போட்டுள்ளார். மேலும் அவருக்கு அறிவுரை கூறுவது போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒழுக்கமாக நடந்து கொண்டால் தான் தன் பெயரை நிலைநாட்டிக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
இவர் தனுஷ் - மீனாவை பற்றி பேசியபோது எப்படி நெட்டிசன்கள் கோவமாக பதிவு போட்டது போலவே... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து வாயில் வந்தது பேச வேண்டாம் என கூறி வருகிறார்கள். குறிப்பாக ஜிம் போட்டோஸ் குறித்த விமர்சனத்திற்கு.. அது அவரின் உரிமை என்றும், மற்ற தகவல்களையும் போகிற போக்கில் பேசாமல், ஆராந்து உண்மை தன்மை அறிந்து பேசுங்கள் என கோவமாக பதிவிட்டு வருகிறார்கள்.