விசேஷ வீட்டில் வெடித்த சண்டை! சூழ்ச்சி வலையில் சிக்கிய ஜீவா! இரண்டாக உடையும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம்?
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தில் இருந்து தன்னுடைய மருமகன் ஜீவாவை பிரிக்க வேண்டும் என மீனாவின் தந்தை ஜனார்த்தனன் நினைத்த நிலையில், தற்போது ஜீவா விசேஷ வீட்டிலேயே அண்ணன் மூர்த்தியுடன் சண்டை போடுவதால்.. பாண்டியன் ஸ்டார் குடும்பம் இரண்டாக உடைய உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பி பாசத்தை வைத்து ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும், அண்ணன் - தம்பிகள் விட்டுக் கொடுக்காமல் சந்தோஷமாக வாழ்ந்து வருவதே இந்த சீரியலின் தனி சிறப்பு எனலாம். கூட்டு குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் தான் இந்த சீரியலில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியான கதிர் ஒரு சிறு மனஸ்தாபத்தில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தில் இணைந்து விட்டார். மேலும் மீனாவின் அப்பா இவர்கள் வாழ்ந்த வீட்டை பிடிக்கி கொண்டாலும், கதிர் - முல்லை வாழ்ந்து வந்த வீட்டில் தான் அண்ணன் - தம்பிகள் ஒருவருக்கொருவர் மிகவும் சந்தோஷமாக, வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் கதிர் தனியாக ஹோட்டல் பிசினஸ் துவங்கி அதனை கவனித்து வருகிறார். அதேபோல் கடைசி தம்பியான கண்ணன் வங்கி ஒன்றில் வேலையை செய்ய, ஜீவா மட்டும் தன்னுடைய அண்ணனுக்கு துணையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை கவனித்து வருகிறார். மேலும் தற்போது மீனாவை தவிர தனம், முல்லை, ஐஸ்வர்யா, என மூவருமே கர்ப்பமாக இருப்பதால்... மீனாதான் அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும் கவனித்து கொண்டு வருகிறார்.
ஏற்கனவே ஜீவா கடையை சாத்திவிட்டு மீனாவை அழைத்து போய் வீட்டில் விட சென்றதற்காக, பாண்டியன் ஸ்டார் வீட்டில் சண்டை வந்து ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் மூர்த்தி ஜீவா இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் இருந்து ஜீவா பிரிந்து விடுவாரா? என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எப்படியும் தன்னுடைய மருமகன் ஜீவாவை - மீனாவின் தந்தை, பல்வேறு சூழ்ச்சிகள் செய்து பிரிக்க வேண்டும் என நினைத்து வருவது ஒரு பக்கம் இருக்க, அவருடைய நினைப்பை நிஜமாக்குவது போல் இந்த சண்டை அடங்கியிருக்கிறது. தற்போது மீனாவின் தங்கை கல்யாண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வர, பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன் - ஐஸ்வர்யா, கதிர் - முல்லை, என அனைவருமே திருமணமாகும் தம்பதிகளுக்கு தனித்தனியாக மொய் பணம் வைக்கின்றனர்.
இது பற்றி மூர்த்தி தனம் தம்பதிகளுக்கு தெரியாது. ஜீவா... அண்ணன் அண்ணி மொத்தமாக மொய் வைத்து விடுவார்கள், நாம் தனியே வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். இந்நிலையில் தனித்தனியே மொய் வைக்க மொய் வைத்த லிஸ்டில், ஜீவா - மீனாவின் பெயர் மட்டும் இடம்பெறவில்லை. மேலும் பாண்டியன் ஸ்டோர் பெயரில் மூர்த்தி மொய் வைக்க கொடுத்த 50,000 பணத்தை கண்ணன் சத்தியமூர்த்தி - தனலட்சுமி என்கிற பெயரில் வைத்து விடுகிறார்.
இது மீனாவின் தந்தை மூலமாக ஜீவாவுக்கு தெரிய வரவே, ஜீவா தன்னுடைய அண்ணன் மூர்த்தி தன்னை பிரித்துப் பார்ப்பதாக நினைத்து ஆவேசமாக வந்து விசேஷ வீட்டில் வைத்து இப்படி அசிங்கப்படுத்திட்டீங்க என எனவும், பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லாமல் சொல்லி விட்டீர்களா என கத்துகிறார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால் ஜீவா பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.