திருமணத்திற்கு பின் கூடிய கவர்ச்சி! உள்ளாடைக்கு மேல் சேலை காட்டி.. கிளாமர் அலப்பறை செய்த சாந்தினியின் போட்டோஸ்
நடிகை சாந்தினி தற்போது அத்து மீறிய கவர்ச்சியில், உள்ளாடை போன்ற ஜாக்கெட் அணிந்து எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தன்னுடைய 17 வயதிலேயே மிஸ் சென்னை பேஜெண்ட்டாக... டாப் 3 போட்டியாளர்களின் ஒருவராக தேர்வு செய்ய பட்டவர் சாந்தினி. இதை தொடர்ந்து இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சந்தனு ஹீரோவாக நடித்த சிந்து +2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து நான் ராஜாவாக போகிறேன், நய்யப்புடை, வில் அம்பு, கண்ணுல காச காட்டப்பட்ட, என்னோடு விளையாடு போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவுமே வெற்றிபெறாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகிலும் சில படங்களில் இவர் நடித்த நிலையில், அங்கும் வெற்றிபெற முடியாததால் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைய துவங்கிய நிலையில், திடீர் என சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த தாழம்பூ, மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது மீண்டும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள சாந்தினி, எல்லை கடந்த கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் உள்ளாடை போன்ற ஸ்லிப் ஒன்றை அணிந்து, சேலை கட்டி போஸ் கொடுத்துள்ளார் சாந்தினி.
இதை பார்த்து ரசிகர்கள் பலர், திருமணத்திற்கு முன்பு கூட இப்படி ஒரு கவர்ச்சியை காட்டியதில்லை என விமார்சனம் செய்து வருகிறார்கள். சாந்தினி, கடந்த 2018 ஆம் ஆண்டு நடன இயக்குனர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.