'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு'.உடல் எடை கூடி... பிளாக் சேலையில் நிவேதா பெத்துராஜ் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்
நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது கருப்பு நிற சேலையில்... கண்ணை கவரும் அழகில் எடுத்து கொண்ட, லேட்டஸ்ட் போட்டோ ஷூட், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பிறந்த... மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ், பின்னர் தந்தையின் வேலை நிமித்தமாக கோவில் பட்டியில் குடியேறினர் நிவேதா பெத்துராஜின் குடும்பத்தினர். தன்னுடைய 10 வயது வரை, தமிழ்நாட்டில் வாசித்த இவர், பின்னர் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றார்.
10 வயதுக்கு மேல், தன்னுடைய ஸ்கூலிங், காலேஜ் போன்றவற்றை அங்கேயே முடித்த நிவேதா பெற்றதுராஜ் 2015 ஆம் ஆண்டு, மிஸ் இந்தியா UAE பட்டம் பெற்றார்.
இதுவே இவர் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் விதைத்தது. துபாயில் இருந்தபடியே தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய நிவேதா பெற்றதுராஜுக்கு, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான, ஒருநாள் கூத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து, உதயநிதிக்கு ஜோடியாக பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக், விஜய் ஆன்டனியுடன் திமிரு புடிச்சவன், பிரபு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து, ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார்.
'கண்ணை நம்பாதே' உதயநிதியை காப்பற்றியதா? காலைவாரியதா... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் !
தற்போது தமிழை விட தெலுங்கு திரையுலகில் தான் படு பிசியாக நடித்து வருகிறார் நிவேதா பெத்து ராஜ். எனினும் இதுவரை இவரால், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
நடிப்பை தாண்டி சமூக வலைதளத்தில், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள... நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது ரசிகர்களை தன்னுடைய அழகால் மயக்கும் விதத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது உடல் எடையை ஏற்றி கொழுக்கு.... மொழுக்கு... அழகில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, கருப்பு நிற சேலையில்... கண்ணை கவரும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.