சமந்தாவுக்கே டஃப்... 'பத்து தல' படத்தில் ஐட்டம் டான்சில்... கவர்ச்சியில் இறங்கி குத்திய சாயிஷா! வெளியான புகைப்
நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு... ஐட்டம் டான்ஸ் ஆடியது போல், பத்து தல படத்தில் நடிகை சாயிஷா ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள புகைப்படங்கள் தற்போதுவெளியாகியுள்ளது .
சிம்பு நடிப்பில் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'பத்து தல'. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இதில் இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு, கெளதம் கார்த்தி, ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், TJ அருணாச்சலம், அணு சித்தாரா, நடிகர் சென்ராயன், இயக்குனர் ஒலிம்பி கிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சிம்பு ரசிகர்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட நேரு ஸ்டேடியம்! 'பத்து தல' ஆடியோ லான்ச் குறித்த வீடியோ!
மேலும் சிம்புவின் ரசிகர்கள் அலைகடல் போல், நேரு உள்விளையாட்டு அரங்கில் கூடி உள்ளனர். பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் இசை வெளியீட்டு விழா துவங்கியுள்ள நிலையில்... இப்படத்தில் நடிகை சாயிஷா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
நடிகை சாயிஷா, திருமணத்திற்கு பின்னர் கமிட் ஆன படங்களில் மட்டுமே நடித்த நிலையில், பின்னர் திரையுலகில் இருந்து விலகி, குழந்தை பெற்று கொண்டு குடும்பம் கணவர் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'பத்து தல' படத்தில் ஐட்டம் டான்சில் இறங்கி குத்தியுள்ளார்.
கெளதம் கார்த்தியுடன் இவர் டான்ஸ் ஆடிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள், புஷ்பா முதல் பாகத்தில்... ஐட்டம் டான்ஸ் ஆடிய சமந்தாவுக்கே டஃப் கொடுக்கிறாரா சாயிஷா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.