முதல் பாகம் ரூ.500 கோடி வசூலித்து என்ன பிரயோஜனம்... பொன்னியின் செல்வன் 2 படத்தை வாங்க ஆள் இல்லையாம்! இது எங்க?
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கு வினியோகஸ்தர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்தது பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு ஜாம்பவான்கள் எடுக்க முயன்றும் கைகூடாமல் போன இந்த படத்தை பல ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர் வெற்றிகரமாக எடுத்துக் காட்டி உள்ளார் மணிரத்னம். இப்படத்தை அவர் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதில் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக் குவித்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆன இப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. அதன்படி நேற்று இப்படத்தின் முதல் பாடலான அக நக என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... குந்தவையின் காதலை மெல்லிசையோடு வெளிப்படுத்தும் 'அக நக' முதல் சிங்கிள் பாடல்! வீடியோ...
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிசினஸ் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வெளியிட தெலுங்கு வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் அப்படத்தின் முதல் பாகம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை வாரிக்குவித்திருந்தாலும், இந்தி மற்றும் தெலுங்கில் சுத்தமாக வரவேற்பை பெறவில்லையாம்.
அதோடு சமீபத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் தெலுங்கு வெர்ஷனை டிவியில் ஒளிபரப்பியபோதும் வெறும் 2.17 என்கிற மோசமான டிஆர்பி ரேட்டிங்கை தான் இப்படம் பெற்றிருந்ததாம். இதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வாங்க தெலுங்கு வினியோகஸ்தர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. பெரிய அளவில் பொன்னியின் செல்வன் 2 படத்தை பிசினஸ் செய்துவிடலாம் என ஆவலோடு இருந்த படக்குழுவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தங்கள் தரிசனம் கிடைக்குமா... குந்தவை திரிஷா உடன் டுவிட்டரில் chat செய்த வந்தியத்தேவன் கார்த்தி