MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !

இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !

இன்று ஜூலை 18 பாடலாசிரியரும் கலைஞருமான வாலியின் நினைவு நாள். மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இசைஞானி இளையராஜா உடன் இவரது கூட்டணி ரசிகர்களின் நினைவில் நீங்காதவை. மூன்று சகாப்த இசையமைப்பாளர்களுடன் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். வாலி இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து கடந்த கால நினைவலைகள் ஹிட்கள் இதோ !ஏ ஆர் ரகுமான் வாலி இருவரும் அடிக்கடி ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். இவர்களின் சங்கமம் ரசிகர்களின் சிறந்த ஒன்றாக இருந்துள்ளது.  இவர்களின் கிளாசிக் பாடல்களை பார்ப்போம்..

3 Min read
Kanmani P
Published : Jul 18 2022, 02:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Chikku Bukku Rayile (Gentleman)

Chikku Bukku Rayile (Gentleman)

சிக்கு புக்கு ரயிலே :

ரகுமானுக்காக வாலி முதன் முதலில் இயக்குனர் சங்கர் அறிமுகமான ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே என்னும் பாடலை எழுதியிருந்தார். மற்ற அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தாலும் வாலியின் இந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இது அன்றை நாகரிகத்தின் பிரதிபலிப்பாகவும் ஆங்கில வார்த்தைகளின் நியாயமான பங்கையும் பெற்றது.
 

210
Mukkala Mukkabla (Kadalan)

Mukkala Mukkabla (Kadalan)

முக்காலா முக்காபுலா :

பின்னர் 'முக்காலா முக்காபுலா'' அவர்களின் மிகவும் பிரபலமான ஒத்துழைப்பாக இருந்தது. பிரபுதேவாவின் காதலன் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் ஆங்கில வார்த்தைகளின்  தாராளமான நடமாட்டத்தில் உருவானது. ஆழமான காதல் வார்த்தைகள் வரை வேடிக்கையான வாலியின் பாடல் வரிகள் சங்கரின் படத்திற்கு சரியாக பொருந்தியது. அது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

மேலும் செய்திகளுக்கு...கொரோனா மற்றும் செல்ல பிராணியுடன் போராடும் வரலட்சுமி சரத்குமார்...வீடியோ இதோ!

310
Kappaleri Poyaachu (Indian)

Kappaleri Poyaachu (Indian)

கப்பலேறி போயாச்சு :

வாலி, ரகுமான், சங்கர் மூவரும் மீண்டும் ஒன்றிணைந்த 'இந்தியன்' படத்தில் கப்பலேறி போயாச்சு பாடல் வாலியின் வரிகளில் எழுந்தவை. நம்ம வாசல் தேடி சாரல் வரும், நெடுவானம் தூவும் தூறல் வரும் என்று ஒற்றை வரியை பயன்படுத்தி இதயத்தை தொட்டார் வாலி.  

மேலும் செய்திகளுக்கு...அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... வலிமை சுமாரான படம் தான் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி

தனது நாட்டு மக்களிடம் மழை கடைசியாக தனது தேசத்தின் வாசல் எட்டிவிட்டது என நாயகன் கூறுவதும்.  காதலி தனது காதலருக்கு அவர்களின் கஷ்டங்கள் இறுதியாக முடிந்து விட்டன. மேலும் காதல் அவர்கள் மீது இறுதியாக மழை பெய்யும் என்று ஆறுதல் கூறும் வார்த்தைகளும் இடம் பெற்றன.

410
Mustafa Mustafa (Kadhal Desam)

Mustafa Mustafa (Kadhal Desam)

முஸ்தபா முஸ்தபா :

இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த காதல் தேசம் படத்தின் முஸ்தபா முஸ்தபா பாடலை வாலி தான் எழுதி இருந்தார். 90களின் நட்பு கீதம் என பாராட்டப்படும் இந்த பாடல் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மனதை தொட்ட பாடலாக உள்ளது.  கல்லூரி நாட்களில் ஏற்பட்ட நட்பு குறித்த ஆழமான வரிகள் பிரியாவிடை விழாவில் இன்றளவும் இடம்பெறக்கூடிய பாடலாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்

510
Oh Maria (Kadhalar Dhinam)

Oh Maria (Kadhalar Dhinam)

ஓ மரியா :

கதிர் - ரகுமான் - வாலி கூட்டணியில் உருவாகிய காதலர் தினம் படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி தான் எழுதியிருந்தார்.  ஓ மரியா பாடல் மிகவும் பிரபலமானது. 60  வயதுகளை கடந்து விட்ட வாலி இளசுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப எழுதிய வரிகள் நெட் கஃபே போன்ற இணையும் சார்ந்த வார்த்தைகளுடன் அற்புதமாக அமைந்திருந்தது.

610
secret of success (boys)

secret of success (boys)

சீக்ரெட் அஃப் தி சக்ஸஸ் :

பாய்ஸ் படத்தில் "சீக்ரெட் அஃப் தி சக்ஸஸ்" என்னும் துள்ளலான பாடலுக்கு வரிகளை இயற்றியிருந்தார் வாலி. எண்ணில் அடங்கா ஊக்கமூட்டும் வார்த்தைகளைக் கொண்ட இந்த பாடல் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. ஒரு சாமானியர் கூட அணுகும்படியான வாலி தனக்கே உறுதியான முறையில் இந்த பாடலை கொடுத்திருந்தார். "கேட்டுக்கோ.. இலக்கு கால் கிலோ/ நஷ்டம் கால் கிலோ /உழைப்பு கால் கிலோ/ சேர்த்துக்கோ பக்தி கால் கிலோ/ நம்பிக்கையும் கால் கிலோ/ திறமை கால் கிலோ எல்லாம் தான் சேர்த்து கட்டின பெரிய பொட்டலம் வெற்றியின் ரகசியம் என வார்த்தைகளை கோர்த்து அடுக்கி ரசிக்க வைத்தார் வாலி.

710
Aararai Kodi (Anbe Aaruyire)

Aararai Kodi (Anbe Aaruyire)

ஆறரை கோடி :

எஸ் ஜே சூர்யா, ரகுமான் உடன் இணைந்து வாலி எழுதிய "ஆறரை கோடி" ஹீரோவை மீட்பராக மாற்றும் வரிகளாக அமைந்தது. பாடல் ஆசிரியர் ஒரு நடிகரை ஹீரோவாக மாற்ற முடியும் என காட்டியவர் வாலி.

810
Munbe Vaa (Sillunu Oru Kadhal)

Munbe Vaa (Sillunu Oru Kadhal)

 முன்பே வா :

காதலர்களுக்கு மிகவும் பிடித்த "முன்பே வா" என்னும் பாடலை வாலி தான் எழுதியிருந்தார். ரகுமான்- வாலி ஜோடி காதல் தட்டில் இனிமையான விருந்தை படைத்தனர். சில்லுனு ஒரு காதல் படத்தின் பாடல் மனதை தொட்ட ஒன்றாக அமைந்தது. நிலாவிடம் வாடகை வாங்கி/  விழி வீட்டில் குடி வைக்கலாமா? போன்ற வரிகள் காலத்திலும் அழியா படிமங்களை உருவாக்கியது.

910
Athiradikaaran (Sivaji)

Athiradikaaran (Sivaji)

அதிரடிக்காரன் :

ரஜினியின் சிவாஜி படத்தில் "அதிரடிக்காரன்" என்னும் பாடலை வாலி எழுதியிருந்தார். சங்கர் - ரகுமான் - வாலி கூட்டணியில்  அமைந்த இந்தப் பாடலில் ரஜினி வேறொரு ஜோனரில் கட்டப்பட்டிருப்பார். ஸ்பைடர் மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் போன்று  கிளாசிக் சூப்பர் ஹீரோக்களையும் இந்த பாடல் நினைவூட்டியது. பில்லா, ரங்கா ,பாட்ஷா தான் என்ற  ஒரு வரியுடன் பாடலின் ஹீரோ யார் என்று உடனடியாக சொன்னார் வாலி.

1010
Ella Pugazhum (Azhagiya Tamizh Magan)

Ella Pugazhum (Azhagiya Tamizh Magan)

எல்லாப் புகழும் :

வாலியின் அழகிய தமிழ் மகன் பாடலில் அவர் எழுதிய "எல்லாப் புகழும்" என்னும் பாடல் விஜய்யின் சிறந்த ஒன்றாக அமைந்தது. ரஹ்மானும் வாலியும் கூட்டணியில்  ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியிருந்தது. இந்த பாடல் "உன்னால் முடியும் "என்ற வாசகம் தளபதியின் ரசிகர்கள் சங்கத்தின் டேக் லைனாக மாறியது.

About the Author

KP
Kanmani P
ஏ. ஆர். ரகுமான்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved