அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது செல்லப் பிராணியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் ஏறி குதித்தும் இறங்கியும், கேமராவை எட்டிப் பார்த்துமாய் விழி பிதுங்கி நிற்கிறார் அந்த வீடியோவுடன் நான் கோவித்தை டீலிங் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. பின்னர் விஜய், தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து விட்டார். சர்க்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக மிரட்டி இருந்த இவர் தாரை தப்பட்டையில் கரகாட்டம் ஆடுபவராக வந்து கவர்ச்சியில் மட்டுமல்லாமல் செண்டிமெண்டிலும் தூள் கிளப்பி இருப்பார்.

மேலும் செய்திகளுக்கு...அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்... வலிமை சுமாரான படம் தான் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி

அதேபோல சண்டைக்கோழி 2 விலும் விஷாலுக்கு வில்லியாக வந்து மிரட்டிய இவர் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழிகளிலும் பிரபலமானார். சமீபத்தில் அவரது நடிப்பில் பார்த்திபனின் 'இரவின் நிழல்' வெளியாகியுள்ளது. நல்ல வரவேற்புகளை பெற்று வரும் இந்த படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது. போலி சாமியாருடன் இருக்கும் சிஷ்யையாக இவர் நடத்துள்ளார்.

இந்நிலையில் வரலட்சுமி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை வீடியோ மூலம் வெளிப்படுத்தியிருந்தார். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வரு, இன்னும் கொரோனா நம்மை சுற்றி தான் இருப்பதாகவும் அதனால் அனைவரும் மாஸ்அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு...நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மகன்... மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மாதவன் - வைரலாகும் வீடியோ

Scroll to load tweet…

அதோடு எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி நடிகர்கள் தயவுசெய்து ஒட்டுமொத்த பட குழுவினரையும் மாஸ்க் அணிய வலியுறுத்துங்கள். ஏன் என்றால் நடிகர்களாகிய நாம் மாஸ்க் அணிய முடியாது என குறிப்பிட்டு, தன்னை சந்தித்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் கோவிட் குறித்த அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்

View post on Instagram

தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது செல்லப் பிராணியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் ஏறி குதித்தும் இறங்கியும், கேமராவை எட்டிப் பார்த்துமாய் விழி பிதுங்கி நிற்கிறார் அந்த வீடியோவுடன் நான் கோவித்தை டீலிங் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.