வில்லங்கமான கதையால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட டாப் 5 சர்ச்சைக்குரிய படங்கள்
சில இந்தியப் படங்கள் வில்லங்கமான காட்சிகள் காரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. 2014 வரை 5 படங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அந்தப் படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

Banned Movies in India : சினிமா முக்கிய பொழுதுபோக்கு ஊடகங்களில் ஒன்று. இன்று துணிச்சலான, வன்முறை நிறைந்த பல படங்கள் வந்து செல்கின்றன. ஆனால் 2014 வரை போல்டான காட்சிகள் மற்றும் அதிக வன்முறை காரணமாக ஐந்து படங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
Paanch
பான்ச் (2001):
1977ம் ஆண்டு நடந்த ஜோஷி அப்யங்கரின் தொடர் கொலைக் கதையால் ஈர்க்கப்பட்ட எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகவும் கொடூரமானதாகவும், வன்முறை நிறைந்ததாகவும் இருந்தது. போதைப்பொருள், வன்முறை, சண்டை, கிளர்ச்சி செய்யும் இளைஞர்களைக் காட்டியதால் Paanch தடை செய்யப்பட்டது.
Kamasutra
காமசூத்ரா (1996):
இரண்டு நல்ல தோழிகள் எதிரிகளாக மாறும் கதை இது. சர்வதேச அளவில் வெளியான Kamasutra படம், பெண்களின் ஆசைகள் மற்றும் நெருக்கம் குறித்த துணிச்சலான காட்சிகள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... 2025-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்
Bandit Queen
பண்டிட் குயின் (1994):
பூலன் தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம், அவரது சாதி மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டத்தைக் காட்டியது. பூலன் தேவி, Bandit Queen படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தடை செய்யப்பட்டது.
Unfreedom
அன்ஃப்ரீடம் (2014):
ஒரு லெஸ்பியன் காதல் கதையான இதில் மத மோதல்களும் உள்ளன. நெருக்கமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தலைப்பைக் கையாண்டதால் Unfreedom படம் தடை செய்யப்பட்டது. இதன் தடை, கருத்து சுதந்திரம் மற்றும் LGBTQ உரிமைகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியது.
The Pink Mirror
தி பிங்க் மிரர் (2004):
திருநங்கைகளை மையமாகக் கொண்ட முதல் இந்தியப் படம் இது. திருநங்கைகளின் வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்பை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது. திருநங்கை மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்டவை குறித்த காட்சிகள் இருந்ததால் The Pink Mirror திரைப்படம் தடை செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... கோடிகளில் சம்பளம் தந்தும்; பான் மசாலா விளம்பரங்களை தூக்கியெறிந்த டாப் 5 நடிகர்கள்