கோடிகளில் சம்பளம் தந்தும்; பான் மசாலா விளம்பரங்களை தூக்கியெறிந்த டாப் 5 நடிகர்கள்
பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த டாப் 5 இந்திய நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Actors Who Rejected Pan Masala Ads: திரைப்படங்கள் தான் சினிமா நட்சத்திரங்களை ஸ்டார் ஆக்குகிறது. ரசிகர்களின் அன்பை சம்பாதித்தால் தான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும். இந்தியாவில் நடிகர்களை கடவுள் போல் பார்க்கும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். அதனால் அவர்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்டுவிடுவார்கள். இதையே வியாபாரம் ஆக்கும் நோக்கில் சில நடிகர்கள் விளம்பரங்களில் நடித்து அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்கள்.
Actors in Pan Masala Ads
பாலிவுட் நடிகர்களும்... பான் மசாலா விளம்பரமும்
அதிலும் சில சர்ச்சைக்குரிய விளம்பரங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் பான் மசாலா விளம்பரம். முன்னணி நட்சத்திரங்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாக பான் மசாலா என்ற பெயரில் விளம்பரங்கள் செய்யாவிட்டாலும், இதுபோன்ற விளம்பரங்களால் நட்சத்திரங்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக் கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் ஆகியோர் பான் மசாலா விளம்பரங்களில் நடித்துள்ளனர்.
ஆனால், எத்தனை கோடி கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்காத நடிகர்களும் சினிமா உலகில் உள்ளனர். அப்படி பல கோடி சம்பளத்துடன் வந்த பான் மசாலா விளம்பர வாய்ப்புகளை நிராகரித்த ஐந்து நடிகர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... அல்லு அர்ஜூன், அட்லீ படத்திற்கு ரூ.800 கோடி பட்ஜெட்டா? சரி, சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Allu Arjun
1. அல்லு அர்ஜுன்
புஷ்பா போன்ற திரைப்படங்களின் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக மாறிய அல்லு அர்ஜுன், 2023 இல் கிடைத்த பான் மசாலா விளம்பர வாய்ப்பை நிராகரித்தார். புஷ்பா படத்தில் அவர் புஷ்பராஜ் கேரக்டருக்காக பான் மசாலா பயன்படுத்தியதால் அதன்மூலம் கிடைத்த புகழைப் பயன்படுத்த அவரை பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால் அல்லு அர்ஜுன்ர் அதனை நிராகரித்தார்.
Karthik Aryan
2. கார்த்திக் ஆர்யன்
பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான கார்த்திக் ஆர்யன் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். தனக்கு இதுபோன்ற விஷயங்களில் தொடர்பு இல்லை என்றும் கார்த்திக் ஆர்யன் கூறியுள்ளார்.
Yash
3. யாஷ்
கேஜிஎஃப் மூலம் பான் இந்திய நட்சத்திரமாக மாறிய யாஷுக்கு 10 கோடிக்கு மேல் சம்பளத்துடன் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
Anil Kapoor
4. அனில் கபூர்
ஒரு காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த அனில் கபூர், தற்போது வரை சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். அனில் கபூர் பெரிய நட்சத்திரமாக இருந்த காலத்தில் வந்த பான் மசாலா விளம்பர வாய்ப்புகளை அவர் நிராகரித்துள்ளார்.
John abraham
5. ஜான் ஆபிரகாம்
ஜான் ஆபிரகாம் பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியது மட்டுமல்லாமல், அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் எதிராக வெளிப்படையாகப் பேசியுள்ளார். எப்போதும் தனது உடற்தகுதி பற்றி மக்களிடம் பேசும் நான் ஏன் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று ஜான் ஆபிரகாம் கூறுகிறார்.
இதையும் படியுங்கள்... ஒவ்வொரு மலையாளிக்குள் கம்யூனிஸ்ட் இருப்பதால் தான் கேரளாவில் மோடி ஜெயிக்க முடியவில்லை ! நடிகர் ஜான் ஆப்ரஹாம் அதிரடி பேச்சு !!