MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சட்டை பட்டன்களை கழற்ற சொன்னார்கள்; உள்ளாடையுடன் சண்டைக் காட்சியா? அத்துமீறலை உடைத்துப் பேசிய ராதிகா ஆப்தே!

சட்டை பட்டன்களை கழற்ற சொன்னார்கள்; உள்ளாடையுடன் சண்டைக் காட்சியா? அத்துமீறலை உடைத்துப் பேசிய ராதிகா ஆப்தே!

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, தனது தொடக்கக் காலத்தில் சில படங்களில் துணிச்சலாகவும் நிர்வாணமாகவும் நடித்ததைத் தவறாகப் புரிந்துகொண்டு சிலர் படப்பிடிப்பில் எல்லை மீறியதாக அதிரடியாகப் பேசியுள்ளார்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 20 2026, 07:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
படப்பிடிப்பு தள ரகசியங்களை அம்பலப்படுத்திய ராதிகா ஆப்தே!
Image Credit : x

படப்பிடிப்பு தள ரகசியங்களை அம்பலப்படுத்திய ராதிகா ஆப்தே!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ராதிகா ஆப்தே. இந்திய அளவில் கதையின் நாயகியாகவும், பல்வேறு பரிசோதனை கதாபாத்திரங்களிலும் துணிச்சலாக நடித்து வருபவர்.

தற்போது நெட்ஃபிளிக்ஸ் (Netflix) வெளியாகியுள்ள 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' (Lust Stories 3) ஆந்தாலஜி படத்தில் கொங்கணா சென் சர்மா, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் படுக்கையறை மற்றும் முத்தக் காட்சிகளில் நடித்திருக்கும் சூழலில், ‘ஜூம்’ ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணல் ஒன்றில் தனது ஆரம்பகால படப்பிடிப்பு தள கசப்பான அனுபவங்கள் குறித்துப் பேசி திரைத்துறையையே அதிர வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முன்பு நிர்வாணமாக நடித்தால் எதையும் செய்வார்களா? - நடிகை ராதிகா ஆப்தே நெத்தியடி!
Image Credit : x

முன்பு நிர்வாணமாக நடித்தால் எதையும் செய்வார்களா? - நடிகை ராதிகா ஆப்தே நெத்தியடி!

திரைப்பயணத்தின் தொடக்கத்தில் துணிச்சலான சில காட்சிகளில் நடித்ததாலேயே சிலர் தன்னை தவறாகப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்ட ராதிகா ஆப்தே, ஆரம்ப காலத்தில் நான் சுமார் 4 அல்லது 5 படங்களில் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறேன். இதை வைத்துக்கொண்டு திரையுலகில் பலர், 'இவ எதையும் பண்ணிடுவா (Yeh toh karlegi na)' என்றே நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.

இதனால் கதைக்குத் தேவையில்லாமல் கூட, எவ்விதக் கேள்வியும் கேட்காமல் இதுபோன்ற காட்சிகளில் நான் உடனே சம்மதிப்பேன் என்று சில இயக்குநர்கள் தவறாகக் கருதினர். ஆனால், நான் அவர்களிடம் நேரடியாகவே, 'முன்பு செய்திருக்கிறேன் என்பதற்காக இப்போது செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை; நான் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டேன்' என்று கறாராகச் சொல்லிவிட்டேன் என்றார்.

35
சும்மா 15 செகண்ட் முத்தம் கொடுங்க - படக்குழுவினர் கேட்ட விசித்திரக் கோரிக்கை
Image Credit : x

சும்மா 15 செகண்ட் முத்தம் கொடுங்க - படக்குழுவினர் கேட்ட விசித்திரக் கோரிக்கை

படப்பிடிப்பு தளங்களில் தேவையின்றி முத்தக் காட்சிகளைத் திணிக்க முயன்ற சம்பவங்களை நினைவு கூர்ந்த ராதிகா, ஒரு காட்சியில் நடிகருக்கு முத்தம் கொடுக்கச் சொன்னால், இதை நான் ஏன் செய்ய வேண்டும்? இந்தக் காட்சி கதைக்கு அவசியமா? என்று நான் இப்போது கேட்கத் தொடங்கிவிட்டேன்.

அதற்கு அவர்களோ, கொஞ்சம்தானே, பண்ணுங்களேன் (Karlo na thoda)... சும்மா 15 வினாடிகள் ஸ்பாட் இம்ப்ரவைசேஷன் (Improvisation) போல கொஞ்சமாக முத்தமிடலாம் என்று சாதாரணமாகக் கூறுவார்கள். இதைக் கேட்டுவிட்டு, மன்னித்துக்கொள்ளுங்கள், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை என்று நேருக்கு நேராகக் கேட்டுவிட்டேன். அவர்கள் அப்படிப் பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கும் என்று குமுறினார்.

45
சட்டை பட்டன்களைக் கழற்ற சொன்னார்கள்- உடைத்துப் பேசிய ராதிகா ஆப்தே!
Image Credit : x

சட்டை பட்டன்களைக் கழற்ற சொன்னார்கள்- உடைத்துப் பேசிய ராதிகா ஆப்தே!

சண்டை காட்சிகளில் கூட தன்னை அரைகுறை ஆடையில் நடிக்க வைக்க முயற்சித்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்தார். ஒரு படத்தின் படப்பிடிப்பில், ஆக்‌ஷன் காட்சியில் என்னை நடிக்க அழைத்தார்கள். அப்போது சட்டையின் பட்டன்களைப் போடாமல் கழற்றிவிட்டு நடிக்குமாறு கேட்டார்கள். இது ஒரு சண்டைக் காட்சி, இதில் சட்டை தானாக நகரத்தான் செய்யும், இது பேசிக் பிசிக்ஸ் (Basic physics). இதில் சட்டை பட்டன்களை ஏன் வேண்டுமென்றே கழற்ற வேண்டும்?' என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், அப்படியென்றால் சட்டை பட்டனைக் கழற்றிவிட்டு, வெறும் பிரா மற்றும் உள்ளாடையுடன் (Undergarments) மட்டுமே சண்டை போட முடியுமா? என்று கேட்டார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும், என்னை வைத்து என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? என்று ஆவேசமாகக் கேட்டு மறுத்துவிட்டேன். முன்பு செய்திருக்கிறீர்களே என்றார்கள். அப்போது செய்தேன், இப்போது முடியாது என்று கூறிவிட்டேன். அந்தப் படத்தின் பெயரைச் சொன்னால் நீங்கள் நிச்சயமாக அதிர்ச்சியடைவீர்கள். அதனால் பெயரைச் சொல்ல மாட்டேன். கதைக்கும் அந்தக் காட்சிக்கும் துளியும் சம்பந்தம் இல்லாததால், அதில் நான் நடிக்கவே இல்லை என்றார்.

55
எல்லை மீறி அழுத்தம் கொடுக்கக் கூடாது - ராதிகா ஆப்தேவின் குமுறல்
Image Credit : x

எல்லை மீறி அழுத்தம் கொடுக்கக் கூடாது - ராதிகா ஆப்தேவின் குமுறல்

இறுதியாகப் பேசிய அவர், ஒரு நடிகர் ஏற்கனவே சில படங்களில் துணிச்சலான அல்லது நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதற்காக, தொடர்ந்து அதுபோன்ற காட்சிகளில் தயக்கமின்றி நடிப்பார் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. ஒரு காட்சி கதைக்கு ஏன் தேவை, அதன் நோக்கம் என்ன என்பதை இயக்குநர்கள் தெளிவாக விளக்க வேண்டும். ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர்களின் விருப்பத்தையும், அவர்களின் தனிப்பட்ட எல்லைகளையும் மீறி யாரும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று பேசியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனா வரை.. உடல் எடையை வைத்து பெண்களை எடைபோடும் சோஷியல் மீடியா!
Recommended image2
ரூ.200 கோடி சென்னை பங்களா டூ மும்பையில் 1,700 சதுர அடி வீடு: சூர்யா - ஜோதிகா எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?
Recommended image3
பரோட்டா சூரியா? அப்படி கூப்பிடாதீங்க.. சட்டென முகம் மாறிய சூரி.. பிரஸ் மீட்டில் என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனா வரை.. உடல் எடையை வைத்து பெண்களை எடைபோடும் சோஷியல் மீடியா!
Recommended image2
ரூ.200 கோடி சென்னை பங்களா டூ மும்பையில் 1,700 சதுர அடி வீடு: சூர்யா - ஜோதிகா எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved