Social Media Body Shaming: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனா கைஃப் வரை நடிகைகளை உருவக்கேலி செய்வது தொடர்கதையாகி வருகிறது. உடல் எடையை வைத்து மனிதர்களை எடைபோடும் சோஷியல் மீடியா குறித்து இந்த செய்தியில் அலசுவோம்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தன் கணவர் மற்றும் மகன் உடன் மும்பையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது கேமராவில் சிக்கிய கத்ரீனா கைஃப் பிரேக்கிங் செய்தியானார். கல்யாணத்துக்கு முன்பு ஜீரோ சைஸில் இருந்த அவர், இப்போது குண்டாக இருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவருடைய பழைய போட்டோக்களையும் இப்போதைய போட்டோக்களையும் ஒப்பிட்டு சோஷியல் மீடியாவில் பரப்பி வருகிறார்கள்.
நடிகைகளை உருவக்கேலி செய்த நெட்டிசன்கள்
நடிகை கத்ரீனா கைஃபின் உடல் மாற்றம் பற்றி இப்போது பெரிய விவாதமே நடக்கிறது. இது கத்ரீனாவுக்கு மட்டும் நடக்கவில்லை. இதற்கு முன்பு கேன்ஸ் 2026 விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனும் இதேபோல ட்ரோல் செய்யப்பட்டார். குண்டாக மாறுவது என்றால் ஒரு சிலருக்கு ஏன் இவ்வளவு கேவலமாகத் தெரிகிறது? உடல் எடை அதிகமாக இருப்பவர்களை ஏன் ட்ரோல் செய்கிறார்கள்? இந்த மனநிலைக்கு என்ன காரணம்?
பரோட்டா சூரியா? அப்படி கூப்பிடாதீங்க.. சட்டென முகம் மாறிய சூரி.. பிரஸ் மீட்டில் என்ன நடந்தது?
குண்டாக இருந்தால் என்ன தவறு?
நடிகை கத்ரீனா கைஃப் ஒல்லியாக இருந்தபோது அவருடைய அழகைப் புகழ்ந்த அதே ஆட்கள் தான், இப்போது அவர் குண்டானதும் அவரைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். இது ஏன் இப்படி நடக்கிறது? குண்டாக இருப்பவர்களை சமூகம் ஏன் கிண்டல் செய்கிறது?
சமூக அறிவியலில் இதை 'ஃபேட்ஃபோபியா' (Fatphobia) என்று சொல்வார்கள். இது வெறும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. ஒருவரின் உடல் அளவை வைத்து அவர்களைக் கீழ்த்தரமாகப் பார்க்கும் ஒரு மோசமான சிஸ்டம் இது. இதற்கு முக்கிய காரணம், இந்திய சினிமா மற்றும் நாடகங்களில் குண்டாக இருப்பவர்களை காமெடி பீஸாகப் பயன்படுத்துவது தான். 2025-ல் மலையாள சினிமா பற்றி வெளியான ஒரு ரிப்போர்ட் இதைத் தெளிவாகச் சொல்கிறது.
குண்டான கேரக்டர்களை காமெடிக்காக காட்டுவதால், அந்தப் படங்களைப் பார்த்து வளரும் மக்களும் நிஜ வாழ்க்கையில் குண்டாக இருப்பவர்களைக் கிண்டல் செய்யப் பழகிவிடுகிறார்கள். இந்திய சமூகத்தில் இந்த 'பாடி ஷேமிங்' (Body shaming) கலாச்சாரத்தை உருவாக்கியதே சினிமாக்களும் நாடகங்களும் தான். இது உடல் எடைக்கு மட்டும் இல்லை, மாற்றுத்திறனாளிகளைக் கிண்டல் செய்வதற்கும் நிறைய உதாரணங்களை சொல்லலாம்.
இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை
ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் உடல் எடை அதிகமாக உள்ளவர்களில் 71% பேருக்குத் தங்கள் எடையை நினைத்து தங்கள் மீதே வெறுப்பு இருக்கிறது. 74.6% பேர் தங்கள் எடையை நினைத்து மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களைத் தாங்களே வெறுக்கிறார்கள். 50% பேர், உடல் எடையைக் குறைக்கும் வரை தங்களால் ஒரு நல்ல சமூக வாழ்க்கையை வாழ முடியாது என்று நம்புகிறார்கள்.
குண்டாக இருப்பவர்களை சோம்பேறிகள், பலவீனமானவர்கள் அல்லது மன உறுதி இல்லாதவர்கள் என்று தான் சமூகம் பார்க்கிறது. இந்தப் பிரச்சனை வெளியே மட்டும் இல்லை, வேலை பார்க்கும் அலுவலகத்திலும் உள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்கள் இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். டெல்லியில் உள்ள பன்னாட்டு நிறுவன ஊழியர்களிடம் நடத்திய ஆய்வில், உடல் எடையைக் கிண்டல் செய்வது பெரிய மனநலப் பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று தெரியவந்துள்ளது. இதனால் குண்டாக இருப்பவர்கள் மற்றவர்களிடம் சகஜமாகப் பழகத் தயங்குகிறார்கள்.
2001-ல், யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான ரெபெக்கா புல் மற்றும் கெல்லி பிரவுனெல் ஆகியோர் ஒரு உண்மையை வெளிப்படுத்தினார்கள். குண்டாக இருப்பவர்கள் வேலை, கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் பெரிய பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். 28% ஆசிரியர்கள், ஒருவருக்கு அதிக உடல் எடை இருப்பது மிகவும் மோசமான விஷயம் என்று நம்புகிறார்கள். 24% நர்ஸ்கள், குண்டான நோயாளிகளைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.
'விஜய்யே எனக்கு போன் செய்தார்.. போதுமா'.. உடைத்து பேசிய விஜய் சேதுபதி.. சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப்!
மருத்துவத் துறையிலும் பாகுபாடு
இதில் மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், குண்டாக இருப்பவர்கள் டாக்டரிடம் போகவே தயங்குகிறார்கள். டாக்டர்கள் தங்களைக் கிண்டல் செய்வார்களோ என்ற பயத்தில் பலரும் சிகிச்சையே எடுத்துக்கொள்வதில்லை. இதனால் அவர்கள் பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
குண்டாக இருப்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
குழந்தை பிறந்த பிறகு எந்த ஒரு பெண்ணுக்கும் உடல் எடை கூடுவது ரொம்ப சாதாரணமான விஷயம். அதற்காக அவர்களை ட்ரோல் செய்வதோ அல்லது அந்தப் பெண் மன்னிப்பு கேட்கும் நிலையை உருவாக்குவதோ கூடாது. எந்தத் தயக்கமும் இல்லாமல் அவர்கள் டாக்டரிடம் போகும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். ஆபீஸிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ, ஒருவரின் சாப்பாட்டுத் தட்டையோ அல்லது உடல் அளவையோ யாரும் கமெண்ட் செய்யக் கூடாது. அவர்களுக்குப் பின்னால் கிசுகிசுப்பதோ, முன்னால் கிண்டல் செய்வதோ கூடாது. பள்ளிகளில் பாடி ஷேமிங்கிற்குப் பயந்து குழந்தைகள் அழும் நிலை மாற வேண்டும். காலம் மாறும்போது நமது எண்ணமும் மாற வேண்டும்.


