MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2 நாடுகள், 2 படங்கள்... ஒரே இசை மேதை: 2027 ஆஸ்கர் ரேஸில் இளையராஜாவின் 2 படங்கள் தேர்வு!

2 நாடுகள், 2 படங்கள்... ஒரே இசை மேதை: 2027 ஆஸ்கர் ரேஸில் இளையராஜாவின் 2 படங்கள் தேர்வு!

உலகத் திரையுலகின் மிக உயரிய விருதான 2027 ஆஸ்கர் விருதுப் போட்டியில், இசைஞானி இளையராஜா இசையமைத்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் களமிறங்கித் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளன.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 19 2026, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ilaiyaraja 2 oscars
Image Credit : x

ilaiyaraja 2 oscars

உலகச் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இசைஞானி இளையராஜா இசையமைத்த 2 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் களமிறங்கித் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளன.

2027-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) பிரிவில், இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி திரைப்படமான ‘கோந்தல்’ படமும், இலங்கை நாட்டின் அதிகாரப்பூர்வத் தேர்வாக ‘அந்தோனி’ திரைப்படமும் ஆஸ்கர் பந்தயத்தில் இணைந்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியாவின் சார்பில் களமிறங்கும் 'கோந்தல்'
Image Credit : X

இந்தியாவின் சார்பில் களமிறங்கும் 'கோந்தல்'

கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'கோந்தல்'. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கிய இத்திரைப்படத்தில் 'சுமன்' என்ற முதன்மை வேடத்தில் இஷிதா தேஷ்முக் நடித்திருந்தார். மேலும் கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் வழிபாட்டு முறையான "கோந்தல்" பின்னணியில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வசதியான ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு, அந்தத் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கும் 'சுமன்' என்ற இளம் மணப்பெண்ணைச் சுற்றி இதன் கதைக்களம் சுழல்கிறது.

பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்த இத்திரைப்படம், 56-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான ‘வெள்ளி மயில்’ விருதைப் பெற்றது. தற்போது "சிறந்த சர்வதேச திரைப்படம்" பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக ஆஸ்கருக்குச் செல்கிறது. இதன் மூலம் மராத்தி சினிமா வரலாற்றில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் 4-வது திரைப்படம் என்ற பெருமையை 'கோந்தல்' பெற்றுள்ளது.

34
இலங்கை அரசு சார்பில் ஆஸ்கர் ரேஸில் ‘அந்தோனி’
Image Credit : x

இலங்கை அரசு சார்பில் ஆஸ்கர் ரேஸில் ‘அந்தோனி’

‘கோந்தல்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இளையராஜா இசையமைப்பில் உருவான 'அந்தோனி' திரைப்படமும் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது. இலங்கை அரசு சார்பில் இத்திரைப்படம் ஆஸ்கருக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

வரலாற்றில் முதல்முறையாக, இளையராஜாவின் இசையமைப்பில் இலங்கை தமிழ்த் திரைப் படமாக உருவான 'அந்தோனி', 2027-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் நோக்கிப் பயணிக்கிறது. சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கயல் வின்சன்ட், டிஜே பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3 மொழிகளில் உருவான இத்திரைப்படம் அண்மையில் உலகமெங்கும் வெளியானது.

44
தமிழ் சினிமா வரலாற்றில் இரட்டைச் சாதனை
Image Credit : x

தமிழ் சினிமா வரலாற்றில் இரட்டைச் சாதனை

தமிழ் சினிமா வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இசைஞானி இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் இருவேறு நாடுகளின் சார்பாக ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணியில் உருவான ‘தேவர் மகன்’ மற்றும் ‘ஹே ராம்’ ஆகிய திரைப்படங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரே ஆண்டில் இரண்டு சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்று இசைஞானி இளையராஜா மீண்டும் உலக அரங்கில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
இளையராஜா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'மகாராஜா': ஆஸ்கர் நடிகருடன் நடிக்கத் துடிக்கும் விஜய் சேதுபதி; கைகூடுமா பட வாய்ப்பு?
Recommended image2
'விஜய்யே எனக்கு போன் செய்தார்.. போதுமா'.. உடைத்து பேசிய விஜய் சேதுபதி.. சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப்!
Recommended image3
Actor Nani: பெண்களுக்கு பெரிய கும்பிடு! சடை வளர்ப்பது இவ்வளவு கஷ்டமா? நடிகர் நானி சொன்ன விஷயம்
Related Stories
Recommended image1
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'மகாராஜா': ஆஸ்கர் நடிகருடன் நடிக்கத் துடிக்கும் விஜய் சேதுபதி; கைகூடுமா பட வாய்ப்பு?
Recommended image2
Kamalhaasan : சர்ச்சைக்குரிய சண்டியர் டைட்டில்... மீண்டும் தூசிதட்டி எடுக்கும் கமல்ஹாசன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved