MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kamalhaasan : சர்ச்சைக்குரிய சண்டியர் டைட்டில்... மீண்டும் தூசிதட்டி எடுக்கும் கமல்ஹாசன்?

Kamalhaasan : சர்ச்சைக்குரிய சண்டியர் டைட்டில்... மீண்டும் தூசிதட்டி எடுக்கும் கமல்ஹாசன்?

Kamalhaasan Next Movie Title Sandiyar : எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 19 2026, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kamalhaasan   SU Arunkumar Movie Title
Image Credit : X

Kamalhaasan - SU Arunkumar Movie Title

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கமல்ஹாசனின் ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகின. அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள இந்த புதிய தோற்றம், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் குறித்த பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்.. பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக..! நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கமல் - அருண்குமார் கூட்டணி
Image Credit : Instagram

கமல் - அருண்குமார் கூட்டணி

இந்தப் படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் முதன்முறையாக இணைகின்றனர். மாறுபட்ட கதைக்களங்களை கையாள்வதில் கவனம் செலுத்தி வரும் எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் கமல்ஹாசன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தோன்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தோற்றங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் கமல்ஹாசனின் இந்த புதிய ‘லுக்’, படத்தின் பின்னணி மற்றும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

34
எகிறும் எதிர்பார்ப்பு
Image Credit : Twitter

எகிறும் எதிர்பார்ப்பு

குறிப்பாக, அவரது தோற்றத்தில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் – எஸ்.யு.அருண்குமார் கூட்டணியின் முதல் படம் என்பதால், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்த தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

44
டைட்டில் என்ன?
Image Credit : ANI

டைட்டில் என்ன?

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இது விருமாண்டி ஸ்டைலில் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதால் இப்படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விருமாண்டி படத்திற்கு முதன்முதலில் கமல்ஹாசன் வைத்த பெயர் சண்டியர். அப்போது அந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், மாற்றி விருமாண்டி என வைத்தனர். தற்போது மீண்டும் அதே டைட்டிலை கமல் கையில் எடுத்துள்ளதால், மீண்டும் சர்ச்சையாக வாய்ப்புள்ளது.

44 ஆண்டுகளுக்கு பின் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கமல்ஹாசனின் எவர்கிரீன் திரைப்படம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Oscars 2027: ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் செல்லும் மராத்தி படம் 'கோந்தல்'
Recommended image2
Atlee : அறிவிருக்கா உனக்கு.. சொல்லனும்னா நேரா சொல்லு! விஜய் சேதுபதிக்கு தரமான பதிலடி தந்த விஜய்யின் தம்பி அட்லீ
Recommended image3
ராஷ்மிகா மந்தனா இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன விஷயம்?
Related Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
தமிழ்நாடு தனி கோட்டையாக நின்று இந்தியாவிற்காக சண்டைபோடுகிறது ! கமல்ஹாசன் அதிரடி பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved