MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்.. பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக..! நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்

தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்.. பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக..! நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்

Kamal Haasan First Speech on Parliament: நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஓட்டையும், நாட்டையும் விற்கவே மாட்டேன் என்றார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 05 2026, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாநிலங்களவையில் பேசுவதை கௌரவமாகக் கருதுகிறேன்
Image Credit : Asianet News

மாநிலங்களவையில் பேசுவதை கௌரவமாகக் கருதுகிறேன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது உரையை நிகழ்த்தினார். இது அவரது முதல் உரை என்பதால் மிகவும் கவனம் ஈர்த்தது. ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கிய அவர், “மாநிலங்களவையில் நான் பேசுவதை கௌரவமாகக் கருதுகிறேன்.

24
பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக..
Image Credit : Asianet News

பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக..

காந்தி, பெரியாரின் பேரனாகவும், அண்ணாவின் மகனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். என் சகோதரரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாகக் கற்றுக் கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.

Related Articles

Related image1
40 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவுகட்டும் மெகா கூட்டணி! ரஜினி - கமல் கூட்டணியின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்!
Related image2
SIR ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல்.. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்.. அதிர்ந்த ஆளுங்கட்சி!
34
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்..
Image Credit : facebook.com/iKamalHaasan

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்..

நான் எனது மனதில் மையம் கொண்ட புயலில் இருந்து வரும் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறேன். இந்த வார்த்தைகள் உங்களில் சிலருக்கு காயத்தை உருவாக்கலாம். நான் கடவுளை நோக்கி கை கூப்ப போவதில்லை. எனது பகுதிதறிவு மூளை, கடவுள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்புறப்படுத்திவிட்டது.

நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாக கற்பூர புத்தி தான். அது காற்றோடு கலந்து பல ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின்னர் உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக் குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்க உதவாதா? அதுவும் ஓரளவு உண்மை தான். ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.

Goosebumps💥🔥🔥🔥

தமிழ் படித்தால் பிச்சை எடுக்க கூட முடியாது என்று சொன்ன நிம்மி மாமியை கலைஞானி கமல் மாநிலங்களவையில் செருப்பை சாணியில் முக்கி அடித்த தருணங்கள்👌👏🏻👏🏻👏🏻 pic.twitter.com/4nAsanBJNP

— Surya Born To Win (@Surya_BornToWin) February 4, 2026

44
ஓட்டையும், நாட்டையும் விற்கமாட்டேன்
Image Credit : facebook.com/iKamalHaasan

ஓட்டையும், நாட்டையும் விற்கமாட்டேன்

ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டேன். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாகப் போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர்கள். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
பாராளுமன்றம்
திமுக கூட்டணி கட்சிகள்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்கள் கொண்டாட்டம்! போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்
Recommended image2
விஜய்க்கு இடியாய் இறங்கிய அதிர்ச்சி... தவெகவில் இருந்து விலகும் மிக மிக முக்கியப் புள்ளி..!
Recommended image3
திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயல்.. ஆதாரம் இருந்தும் வேடிக்கை பார்க்கும் முதல்வர்.. விஜய் ஆவேசம்!
Related Stories
Recommended image1
40 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவுகட்டும் மெகா கூட்டணி! ரஜினி - கமல் கூட்டணியின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்!
Recommended image2
SIR ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல்.. நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்ஹாசன்.. அதிர்ந்த ஆளுங்கட்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved