- Home
- Cinema
- Thug Life : காச திரும்ப கொடுங்க; ஒற்றைக்காலில் நிற்கும் நெட்பிளிக்ஸ் - தக் லைஃபால் கமலுக்கு வந்த தலைவலி
Thug Life : காச திரும்ப கொடுங்க; ஒற்றைக்காலில் நிற்கும் நெட்பிளிக்ஸ் - தக் லைஃபால் கமலுக்கு வந்த தலைவலி
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதில் தற்போது புது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thug Life OTT Release in Trouble
தக் லைஃப், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இதில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் சிம்பு, ஜோஜு ஜார்ஜ், திரிஷா, அபிராமி, நாசர் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. தமிழில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த மணிரத்னம் தான் தக் லைஃப் படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 5ந் தேதி திரைக்கு வந்தது.
ரசிகர்களை ஏமாற்றிய தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படம் மீது ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் நாயகன் என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த மணிரத்னமும், கமல்ஹாசனும் மீண்டும் இணைவது தான். 37 வருடங்களுக்கு பின் இவர்கள் இணைந்துள்ள படம் இது என்பதால் நிச்சயம் நாயகன் ரேஞ்சுக்கு ஒரு கேங்ஸ்டர் படமாக தக் லைஃப் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் துளி அளவு கூட நிறைவேற்றாமல் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது தக் லைஃப். மணிரத்னமா இப்படி ஒரு படத்தை இயக்கினார் என கேட்கும் அளவுக்கு படு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது தக் லைஃப்.
வசூலில் வாஷ் அவுட் ஆன தக் லைஃப்
தக் லைஃப் திரைப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வந்ததால், அது பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்தது. அதன்படி இப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகியும் வசூல் இன்னும் 100 கோடியை கூட எட்டவில்லை. நேற்று இப்படத்திற்கு வெறும் ரூ.65 லட்சம் வசூல் கிடைத்திருக்கிறது தமிழ்நாட்டில். இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்விப் படமாக தக் லைஃப் மாற வாய்ப்பு உள்ளது. திரையரங்க உரிமையாளர்களும் இப்படத்தின் மூலம் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
ஓடிடியில் தக் லைஃப் படத்துக்கு வந்த சிக்கல்
தக் லைஃப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.130 கோடிக்கு வாங்கி இருந்தது. ஆனால் படத்தின் ரிசல்ட் படு சுமாராக இருந்ததால், தற்போது அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என நெட்பிளிக்ஸ் பின் வாங்கி உள்ளதாம். பேசப்பட்ட தொகையில் இருந்து 30 கோடியை குறைத்தால் தான் வெளியிடுவோம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் நெட்பிளிக்ஸ். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் ஜூலை முதல் வாரத்திலேயே தக் லைஃப் ஓடிடியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

