MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எதிர்பார்ப்பை எகிற வைத்த சன் டிவி! புதிய ஹீரோயினோடு களமிறங்கும் 'எதிர்நீச்சல் 2' சீரியல்!

எதிர்பார்ப்பை எகிற வைத்த சன் டிவி! புதிய ஹீரோயினோடு களமிறங்கும் 'எதிர்நீச்சல் 2' சீரியல்!

சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த 'எதிர்நீச்சல்' சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 10 2024, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal

Ethirneechal

சன் டிவியில் கடந்த 2022-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'எதிர்நீச்சல்' தொடர் இரண்டு வருடமாக TRP-யில் மாஸ் காட்டிய நிலையில், அதிரடியாக இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக இந்த தொடரை இயக்கி வந்த திருச்செல்வம்  கூறினார். இவரின் இந்த முடிவு, எதிர்நீச்சல் தொடரின் ரசிகர்களை மட்டும் அல்ல, சீரியலில் நடிப்பவர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Ethirneechal ending Reason

Ethirneechal ending Reason

இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான, பல காரணங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், பின்னர் இயக்குனர் திருச்செல்வம் இதற்கான விளக்கத்தை கொடுத்தார். அதாவது எதிர்நீச்சல் சீரியல் TRP ரேட்டிங்கில் சிறு தடுமாற்றத்தை கண்டபோது, அந்த தொடரை வேறு ஒரு பிரைம் டைமுக்கு மாற்ற கூறி சன் டிவி தரப்பு வேண்டுகோள் வைத்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த திருச்செல்லாம் இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, இரண்டாவது சீசன் இயக்க போவதாக கூறியுள்ளார். இதற்க்கு சன் டிவி தரப்பும் ஒப்புதல் வழங்கிய பின்னரே  இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறினார்.

என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அவங்க 2 பேர் தான்! நன்றி மறவாத அட்லீ எமோஷனல் பேச்சு!
 

34
Ethirneechal serial part 2

Ethirneechal serial part 2

தற்போது இயக்குனர் திருச்செல்லாம் இயக்கியுள்ள 'எதிர்நீச்சல் 2' சீரியலில் முதல் பாகத்தில் நடித்த பிரபலங்கள் தான் நடித்துள்ளனர். ஆனால் ஹீரோயினாக நடித்து வந்த மதுமிதா இந்த சீரியலில் இருந்து சில காரணங்களால் விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக ஜீ தமிழில், 'புது புது அர்த்தங்கள்' சீரியலில் நடித்த, பார்வதி நாயகியாக நடித்துள்ளார். மேலும் தாரா கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமும் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
 

44
Ethirneechal 2 Promo

Ethirneechal 2 Promo

எதிர்நீச்சல் முதல் பாகம் நிறைவடைந்த பின்னர் 2-ஆம் பாகம் குறித்து, எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது 'எதிர்நீச்சல் 2' சீரியலின் இரண்டாம் பாகம் குறித்த புரோமோ சன் டிவியில் வெளியாகி, இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது குறிபிடித்தக்கது.

2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image3
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved