MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!

2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!

2024-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், தன்னுடைய அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 ஹீரோக்கள் பற்றி பார்க்கலாம். 

4 Min read
manimegalai a
Published : Dec 10 2024, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
2024 Top 10 Actors Movies

2024 Top 10 Actors Movies

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் ஐந்து படங்களுக்கு மிகாமல் திரையரங்குகளில் வெளியாகிறது.  முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் போது மட்டுமே குறைந்த அளவிலான படங்கள் வெளியிடப்படுகின்றன. இதற்கு காரணம் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் மற்றும் பெரிய நடிகரின் படங்களோடு சிறிய படங்கள் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவனிக்கப்படாமல் போய்விடும் என்கிற அச்சம்தான். ஆனால் கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களை தாண்டி சில சிறிய பட்ஜெட் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். சரி  ஆண்டு ரசிகர்களை நடிப்பால் மிரள வைத்த டாப் 10 நடிகர்கள் பார்க்கலாம்.
 

211
Rajinikanth Vettaiyan Movie

Rajinikanth Vettaiyan Movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கிய இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரஜினிகாந்தின் நடிப்பை அதிகம் கவனிக்க வைத்தது. தலைவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரஜினிகாந்தின் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

2024-ல் கோலிவுட் தலையில் தூக்கி கொண்டாடிய டாப் 10 மூவீஸ் - ஒரு பார்வை

311
Thalapathy Vijay GOAT

Thalapathy Vijay GOAT

தளபதி விஜய்:

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கோட்'. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், 'பிகில்' படத்திற்கு பின்னர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் வெளியான படங்களை விட விஜய்யின் நடிப்பு இந்த படத்தில் சற்று வித்தியாசமானதாக இருந்ததை உணர முடிந்தது. வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்தது, 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம். அதே போல் இந்த ஆண்டு தளபதியின் நடிப்பையும் அதிகம் பேச வைத்தது இப்படம்.

411
Soori Garudan Movie

Soori Garudan Movie

சூரி:

'விடுதலை' படத்திற்கு பின்னர் காமெடி நடிகர் என்கிற இமேஜில் இருந்து விலகி, ஹீரோ அவதாரம் எடுத்துள்ள பரோட்டா சூரி....  நடிப்பில் இந்த ஆண்டு 'கருடன்' மற்றும் 'கொட்டுக்காளி' ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களிலுமே சூரியன் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் சூரிக்கு 2024 சிறப்பான ஆண்டாகவே அமைந்தது.

511
Vijay Sethupathi Maharaja Movie

Vijay Sethupathi Maharaja Movie

விஜய் சேதுபதி:

தென்னிந்திய திரை உலகில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடம், என வெரைட்டியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில்... இந்த ஆண்டு வெளியான திரைப்படம் மகாராஜா. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் வசூலில் சக்க போடு போடும் இந்த படத்தில், விஜய் சேதுபதி எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்தது.

வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'! 4 நாட்களில் 2.0 லைப் டைம் வசூலை காலி செய்த அல்லு அர்ஜுன்!

611
Suriya Kanguva Movie

Suriya Kanguva Movie

சூர்யா சிவகுமார்:

நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் கங்குவா. சுமார் 2000 கோடி வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தை, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஆனால் முதல் நாளே இந்த படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால், 150 கோடி கூட வசூலை எட்டுவதற்கு முன்பே திரையரங்குகளில் வாஷ் அவுட் ஆனது. இந்த திரைப்படத்தில் பல குறைகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுத போதிலும், சூர்யாவின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்தது.

711
Amaran Sivakarthikeyan Movie

Amaran Sivakarthikeyan Movie

சிவகார்த்திகேயன்:

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் காமெடி கலந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் இன்று தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தன்னைத்தானே செதுக்கி கொண்டுள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் அமரன். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தற்போது வரை ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி நடிப்பிலும் ஸ்கோர் செய்தார் சிவகார்த்திகேயன்.

811
Chiyaan Vikrams Thangalaan Movie

Chiyaan Vikrams Thangalaan Movie

விக்ரம்:

நடிகர் விக்ரம் அவர் நடிக்கும் ஓவ்வொரு படத்திற்கும் போடும் உழைப்பு அவரின் படங்களை பார்க்கும் போதே நம்மால் உணர முடியும். தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் திரைப்படத்திற்காக ரிஸ்க் எடுத்து நடிக்க கூடிய சிறந்த நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான 'தங்கலான்'  தங்கமெடுக்கும் பழங்குடி மக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ரியல் KGF படமாக வெளியான இந்த படம், விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றபோதிலும் வசூலில் அடி வாங்கியது. அதே போல் விக்ரமின் நடிப்பு அதிக அளவில் பேசப்பட்டது.

சிவகார்திகேயனுக்காக ரூல்ஸை மாற்றிய பிக்பாஸ்! சர்ச்சையில் சிக்க வைத்த செம்ம சம்பவம்!

911
Lubber Panthu Harish Kalyan and Dinesh Movie

Lubber Panthu Harish Kalyan and Dinesh Movie

ஹரிஷ் கல்யாண் & தினேஷ்:

இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண், தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்து இந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'லப்பர் பந்து' இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த படத்தில் கெத்து கதாபாத்திரத்தில் நடித்த அட்டகத்தி தினேஷ் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

நடிகர் தினேஷ் இந்த ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இதில் கெத்து எனும் கதாபாத்திரத்தில் மிகவும் கெத்தாக நடித்த ரசிகர்கள் மனதை கவர்ந்தார். ஹீரோ ஹரீஷ் கல்யாணாக இருந்தாலும், இப்படத்தின் ரியல் ஹீரோ கெத்து தான் என ரசிகர்கள் கொண்டாடினர்.
 

1011
Dhanush Raayan Movie

Dhanush Raayan Movie

தனுஷ்:

நடிகராக மட்டும் இன்றி இயக்குனராகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் தனுஷ், இந்த ஆண்டு இயக்கி நடித்திருந்த அவரின் 50-ஆவது திரைப்படம் 'ராயன்' இதுவரை பார்த்த தனுஷை விட மிகவும் வித்தியாசமான அமைதியான தனுஷின் நடிப்பை இந்த படத்தில் பார்க்க முடிந்தது. இந்த படத்தில் நடிகரை தாண்டி ஒரு இயக்குனராகவும் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டார் தனுஷ்.

1111
Kavin Star Movie:

Kavin Star Movie:

கவின்:

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியான பின்னர், தான் நடிக்கும் படங்களின் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் கவின், இந்த ஆண்டு 'ஸ்டார்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்தது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்த்
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved