MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அவங்க 2 பேர் தான்! நன்றி மறவாத அட்லீ எமோஷனல் பேச்சு!

என்னுடைய இந்த நிலைக்கு காரணம் அவங்க 2 பேர் தான்! நன்றி மறவாத அட்லீ எமோஷனல் பேச்சு!

இயக்குனர் அட்லி நேற்று நடந்த 'பேபி ஜான்' பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில், தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம், 2 பேர் தான் என தளபதி விஜய் மற்றும் ஷாருக்கானுக்கு உருக்கமாக நன்றி கூறினார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 10 2024, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Atlee Movies

Atlee Movies

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும், அனைவருமே ஜெயிப்பது இல்லை. பலர் ஒரே படங்களிலேயே திரை உலகை விட்டு காணாமல் போனதும் உண்டு. ஆனால் சமீப காலமாக இளம் இயக்குனர்கள், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்று வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் அட்லீ.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Atlee Start the Cinema Carrier in Assistant Director

Atlee Start the Cinema Carrier in Assistant Director

தன்னுடைய 25 வயதில், இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக கேரியரை துவங்கிய அட்லீ, எந்திரன், நண்பன், போன்ற படங்களில் பணியாற்றினார். இந்த அனுபவத்தை கொண்டு சில குறும்படங்களை இயக்கிய அட்லீ,  2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா, போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் தயாரித்திருந்தார். இப்படம் மௌன ராகம் படத்தின் நவ நாகரீக ரிமேக் போல் இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்த போதிலும்,  அந்த விமர்சனங்களை தகர்த்தெறிந்து ரூபாய் 50 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளியது.

2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!

36
Theri Movie Remake

Theri Movie Remake

இந்த படத்திற்கு பின்னர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில், என மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கி ஹார்டிக் வெற்றியை பதிவு செய்தார் அட்லீ. பின்னர் அதிரடியாக பாலிவுட் திரையுலகில் படம் இயக்க சென்றார். ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.

46
Atlee And Allu Arjun Movie

Atlee And Allu Arjun Movie

தன்னுடைய அடுத்த படத்தை, புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்... விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ளது.

சிவகார்திகேயனுக்காக ரூல்ஸை மாற்றிய பிக்பாஸ்! சர்ச்சையில் சிக்க வைத்த செம்ம சம்பவம்!
 

56
Baby John Trailer Launch

Baby John Trailer Launch

தமிழில் சில படங்களை தயாரித்துள்ள அட்லீ,  தளபதி விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படத்தை ஹிந்தியில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க சமந்தா ஏற்று நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  இப்படம் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

66
Atlee Emotional Speech

Atlee Emotional Speech

அப்போது நன்றி மறவாமல் தன்னுடைய இந்த நிலைக்கு காரணமான இருவரை நினைத்து பார்த்து நன்றி கூறினார் இயக்குனர் அட்லீ.  இந்த விழாவில் பேசிய இயக்குனர் அட்லீ... "என்னுடைய முதல் நன்றி ஷாருக்கான் சார் அவர்களுக்கு. அவர் இல்லாமல் நான் பாலிவுட்டில் படம் பண்ணியிருக்க முடியாது. இப்போது நான் பாலிவுட்டில் படம் தயாரித்துள்ளேன். நீங்கள் எங்கிருந்தாலும் என்னை ஆசீர்வதிப்பீர்கள் என நம்புகிறேன் சார்.  இதைத் தொடர்ந்து என்னுடைய இரண்டாவது நன்றி தளபதி விஜய் அவர்களுக்கு. அவர் என்னுடைய அண்ணன், அவர் என் இதயம், அவர் என் உயிர், அவர்தான் எனக்கு எல்லாமே... நான் இப்போது  இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கிய காரணமே அவர்தான் என நன்றி மறவாமல் பேசியுள்ளார். 

கோவிலில் சிம்பிளாக நடந்த திருமணம்; ஜமீன் வீட்டு பெண்ணை கரம்பிடித்தார் காளிதாஸ் ஜெயராம்!!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved