விக்ரமன் TITLE WINNER அல்ல... TOTAL WINNER...! சர்பிரைஸ் பரிசு கொடுத்து ஆரத்தழுவி பாராட்டிய திருமாவளவன்!
சமீபத்தில் முடிவடைந்த, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் ரன்னரப்பான விக்ரமனை பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரிசு கொடுத்து பாராட்டியதை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. கடந்த ஐந்து சீசன்களை விட, சீசன் 6 நிகழ்ச்சி பிரச்சனைகளுக்கு சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் ஒலிபரப்பானது.
அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த சீசன்களில் அதிக பட்சமாக 16 போட்டியாளர்கள் மற்றும் சில வயல்காடு போட்டியாளர்கள் கலந்து கொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இந்த சீசனில் வயல் கார்டு போட்டியாளர் யாரும் இல்லாமல், ஆரம்பத்திலேயே மொத்தம் 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கியது.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வேகத்திலேயே வெளியேற்றப்படுவார்கள் என யூகிக்கப்பட்ட சிலர் வெற்றிகரமாக 106 நாட்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடி வந்தனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 போட்டியில், வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் அதிக சண்டை மற்றும் சச்சரவுகளுக்கு பெயர் போன போட்டியாளராக இருந்தவர் அசீம் தான். மேலும் நேரடியாகவே பல சமயங்களில் மற்ற போட்டியாளர்களை தாக்கி பேசியதோடு மட்டுமல்லாமல், சில தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் அளவிற்கு அடுத்தடுத்து பல சர்ச்சைகளின் சிக்கிய அசீம் எப்படி பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்றது தற்போது வரை பலருக்கு ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்து வருகிறது.
அதே போல், இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை அசீமுக்கு வழங்கியது, ஒரு தவறான முன்னுதாரணம் என்றும் நெட்டிசன்கள் சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்ததையும் காணமுடித்தது.
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பொறுமையாகவும் நிறுத்தி நிதானமாகவும் விளையாடி வந்த விக்ரமன் முதல் ரன்னர் அப்பாக மாறினார். அரசியல்வாதி என்கிற அடையாளத்தோடு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இவர், எந்த ஒரு விஷயத்திலும் தன்னுடைய நிலைப்பாடில் இருந்து விலகாமல், விளையாடினார் என பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
சாவித்ரிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய மறைந்த நடிகை ஜமுனா! வெளியான சொத்து விவரம்..!
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விக்ரமனை சந்தித்து அவருக்கு அழகிய பரிசு ஒன்றையும் கொடுத்து ஆறதழுவி பாராட்டியதை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி விக்ரமனை வரவேற்று வாழ்த்தினேன். பொழுதுபோக்கு தளம் ஒன்றை கருத்தியல் களமாக தளமாக்கிய சாதனையை பாராட்டினேன். நீங்கள் டைட்டில் வின்னர் அல்ல, டோட்டல் வின்னர் என ஆறத்தளவி மெச்சினின். ஆடை போட்ட அறவேந்தன் சிலை பரிசளித்தேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மற்றும் புகைப்படம் வருகிறது.