தாங்க முடியாத வலியில் நடிகை குஷ்பூ..! சாதிக்கும் வரை நிறுத்தமாட்டேன்... புகைப்படத்தோடு குஷ்பூ போட்ட பதிவு!
நடிகை குஷ்பூ காலில் கட்டுடன், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, அதிர்ச்சியான ரசிகர்கள், அவர் முட்டி வலியில் இருந்து சீக்கிரம் மீள வேண்டும் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.
90-களில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான், நடிகை குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்தி, என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டுள்ள இவர், தமிழை தொடர்ந்து, தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர்.
ஹீரோயின் வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயானார்.
ஜூடோ ரத்னம் மறைவுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி..! ட்விட்டரில் உருகிய கமல்..!
திருமணத்திற்கு பின்னர், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அக்கா, அண்ணி, போன்ற அழுத்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்தார். மேலும் பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
திரையுலகை தொடர்ந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் குஷ்பூ, கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தோற்றார். எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் குஷ்பு தற்போது காலில் கட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சாவித்ரிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய மறைந்த நடிகை ஜமுனா! வெளியான சொத்து விவரம்..!
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நிறுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அடுத்ததாக கோயம்புத்தூர், புதுடெல்லி, ஹைதராபாத், துபாய் ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய முழங்கால் வலியோடு அதற்கான வலி நிவாரணியும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த வலி கூடிய சீக்கிரம் சரியாகிவிடும், உங்களின் உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர்.
KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!