ஜூடோ ரத்னம் மறைவுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி..! ட்விட்டரில் உருகிய கமல்..!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் கார்த்தி, ஜூடோ ரத்னம் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார், அதே போல் நடிகர் கமல் ஹாசனும் ட்விட்டர் மூலம் தன்னுடை அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் உடல்நல குறைவு மற்றும் வயது முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார், தற்பொழுது சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
ஜூடோ கே.கே.ரத்தினம் தன் இளம் வயதிலிருந்தே சிலம்பு , கத்தி மற்றும் வாள் சண்டை போன்ற கலையில் ஆர்வம் கொண்டு சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்று தமிழ் மட்டுமின்றி, இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என இந்திய திரையுலகில் சுமார் 1,500 திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர், மூன்று தலைமுறைகளை கண்டவர்.
சாவித்ரிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கிய மறைந்த நடிகை ஜமுனா! வெளியான சொத்து விவரம்..!
இந்நிலையில் இவருடைய உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி S.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, தளபதி தினேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர்கள் நேரில் சென்று மாலையிட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்
திரையுலகில் சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு தனி முத்திரைப் பதித்து யாருமே சாதித்திராத சாதனைகள் பல புரிந்தவர் இதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். திரைத்துறையில் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர் .
KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!
அதே போல் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் ஜூனோ கே.கே.ரத்னம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1976-ம் ஆண்டில் இருந்து அவருடன் பழக்கம் ஏற்பட்டது அவருக்கு என்று தனியாக ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டு அதை திரையுலகிலும் அறிமுகப்படுத்தினார்
அவருடைய அசிஸ்டன்ஸ் இன்று பெரிய ஸ்டன்ட் மாஸ்டர் ஆக உள்ளார்கள். முரட்டு காளை திரைப்படத்தில் ரயிலில் நடைபெறும் சண்டைக்காட்சி போல இதுவரை யாரும் செய்தது இல்லை 93-வயதில் பூரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார் அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனின் பல படங்களுக்கும் ஜூடோ ரத்னம் சண்டை பயிற்சியாளராக இருந்துள்ள நிலையில், நடிகர் கமல்... தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கடுமையான உழைப்பைக் கோரும் சண்டைப் பயிற்சியை உடல் வருத்தமாய்க் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் திரு ஜூடோ ரத்னம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் அளவில் 1500 படங்களில் பணியாற்றியவர். மறைந்துவிட்டார். அவர்க்கென் அஞ்சலி" என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.