த.வெ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக மாற்றம் செய்த விஜய்.. அப்படி என்ன செய்தார்?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சி அலுவலகத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த கேட்டை திடீரென பச்சை நிறமாக மாற்றப்பட்டது.
TVK Vijay
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். விஜய் அரசியலுக்கு வரலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வராமல் சினிமாவில் ஆக்டிவாக அதுவும் உச்சத்தில் இருக்கும் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார்.
Vijay
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருந்தார். மேலும் தனது கட்சி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களம் காணும் என்றும் கூறியிருந்தார்.
இது அதுல்ல... காப்பி சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி
Vijay
தற்போது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ள விஜய் கட்சியின் கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தார். அடர் சிவப்பு, மஞ்சள் நிறத்தில், போர் யானைகள், வெற்றியின் அடையாளமாக கருதப்படும் வாகை மலர் ஆகியவை த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ளன.
Vijay
தவெகவின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாடு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக விஜய் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முக்கிய மாற்றங்களை செய்தாராம்.
விஜய்யின் கட்சி கொடியில் இருக்கும் வாகை மலரில் இவ்வளவு சிறப்பு இருக்கா?
TVK party office
அதாவது தவெக கட்சியின் இரண்டு நுழைவுவாயிலின் கதவுகளுக்கு சிவப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைமை பிறப்பித்த உத்தரவின் பேரில் இரவோடு இரவாக கேட்டில் இருந்த சிவப்பு நிறம் தற்போது மாற்றப்பட்டுள்ளது சிவப்பு நிறத்திற்கு பதில் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் ஏன் இரவோடு இரவாக கேட்டின் நிறம் மாற்றப்பட்டது என்பது தெரியவில்லை.