MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது அதுல்ல... காப்பி சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி

இது அதுல்ல... காப்பி சர்ச்சையில் சிக்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 22 2024, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK Flag

TVK Flag

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கி இருப்பதால் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்துள்ளார் விஜய். விஜய்யின் அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற தனது கட்சி பெயரை அறிவித்த விஜய், அதற்கான கொடி அறிமுக விழாவை இன்று கோலாகலமாக நடத்தி இருந்தார்.

24
Thalapathy Vijay

Thalapathy Vijay

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவலகத்தில் இந்த கொடி அறிமுக விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜய், சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொடியில் போர் யானைகளும், வாகை மலரும் இடம்பெற்று இருக்கிறது. கொடியை அறிமுகப்படுத்திய அவ்ர் அதன் பின்னணியில் இருக்கும் வரலாறை கூறவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அதை சொல்லுவேன் என ட்விஸ்ட் வைத்து சென்றார் விஜய்.

இதையும் படியுங்கள்... கொடிக்கு பின்னணியில் இருக்கும் குட்டி ஸ்டோரி முதல் மாநாடு தேதி வரை; விஜய் ஸ்பீச் ஹைலைட்ஸ் !!

34
Netizens troll

Netizens troll

தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியுடன் அதற்காக இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்த ஸ்பெஷல் பாடலையும் வெளியிட்டார் விஜய். அந்த பாடலுக்கு விவேக் உணர்ச்சிகரமான பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். அந்த பாடல் தற்போது யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

44
X post

X post

தமிழக வெற்றிக்கழகத்தில் கொடி அச்சு அசல் ஸ்பெயின் நாட்டின் கொடியை ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீர்களா என கேள்வி எழுப்பி உள்ளனர். அதுமட்டுமின்றி அதில் உள்ள யானைகள் பெவிக்கால் லோகோவில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்த பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஒரு கரையில்லாத கையை பிடிச்சு போக போறோமே; த.வெ.க கட்சி பாடலால் ஆளும் கட்சியை தாக்கிய தளபதி?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved