ஒரு கரையில்லாத கையை பிடிச்சு போக போறோமே; த.வெ.க கட்சி பாடலால் ஆளும் கட்சியை தாக்கிய தளபதி?
தளபதி விஜய் இன்று காலை தன்னுடைய கட்சியின் கொடி, மற்றும் பாடலை வெளியிட்டுள்ள நிலையில்... இரண்டுமே தற்போது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தளபதி விஜய் இன்று காலை, மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்த தன்னுடைய கட்சி கொடியை வெளியிட்டார். இந்த கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்த நிலையில்... நடுவே இரண்டு பக்கமும் யானைகள் இருக்க, சென்டராக வாகை பூவின் படம் இடம்பெற்றிருந்தது. இதை தொடர்ந்து வெளியான த.வெ.க கட்சியின் பாடல் மூலம், மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்துள்ளார் தளபதி. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, தமன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள தமிழன் கொடி...!!!
தலைவன் கொடி...!!!
தருமக் கொடி...!!!
தாயின் கொடி...!!!
வீரக் கொடி...!!!
விஜயக் கொடி...!!!
ஆதிக்குடிய காக்கும் போன்ற சொற்கள் கேட்பவர்களின் நெஞ்சங்களில் புரட்சியை தட்டி எழுப்பும் வகையில் உள்ளது.
அதே போல் இந்த பாடல் மூலம் ரெண்டு யானைகள் திமுக, அதிமுக சாய்க்கபட்டது போன்றும் த.வெ.க வெற்றி பெற்று போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இரத்தசெவப்பு நெறமெடுதோம் ரட்ட யான பலம் குடுதோம். நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி கொடியில் உயிர் குடுத்தோம். மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம் பச்ச நில திலகம் வச்சோம். பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வாறத பறையடிச்சோம் என தன்னுடைய வார்த்தைகளால் மனதில் நாட்டு பற்றை விதைத்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.
நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். ஒரு கரையில்லாத கையை பிடிச்சு போக போறோமே... தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது போன்ற வார்த்தைகள் மக்களுக்கும் தளபதிக்கு உண்டான நெருக்கத்தை காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
கொடிக்கு பின்னணியில் இருக்கும் குட்டி ஸ்டோரி முதல் மாநாடு தேதி வரை... விஜய் ஸ்பீச் ஹைலைட்ஸ்