காதல் மனைவி ஜோதிகா உடன்.. பிரபல மலையாள நடிகர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா- என்ன விஷயம் தெரியுமா?
நட்சத்திர ஜோடிகளான சூர்யாவும், ஜோதிகாவும் பிரபல மலையாள நடிகரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் படங்களில் ஜோடியாக நடித்தபோது காதலித்து பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.
அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது காதல் என்கிற மலையாள படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் மமுட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஜோதிகா. சமீபத்தில் காதல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றிருந்த நடிகர் சூர்யாவுக்கு பிரியாணி சமைத்து விருந்தளித்தார் மம்முட்டி. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
இதையும் படியுங்கள்... அப்பா நிச்சயம் பெருமைப்படுவார்... குடியரசு தினத்தன்று அக்காவுக்கு கிடைத்த விருதால் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு மலையாள நடிகர் வீட்டுக்கு சூர்யாவும், ஜோதிகாவும் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் வீட்டுக்கு தனது காதல் மனைவி ஜோதிகா உடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சூர்யா. அப்போது சூர்யா - ஜோதிகா உடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “உத்வேகம் தரும் நண்பர்கள்” என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
நடிகை ஜோதிகாவும், நடிகர் பிருத்விராஜும் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த நட்பு ரீதியான சந்திப்பு என பிருத்விராஜ் குறிப்பிட்டு இருந்தாலும், சூர்யாவை வைத்து ஏதேனும் படம் இயக்குமாறு ரசிகர்கள் பிருத்விராஜுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இரண்டே நாளில் ரூ.200 கோடியை அள்ளிய பதான்.... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ஷாருக்கான் படம்