MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரண்டே நாளில் ரூ.200 கோடியை அள்ளிய பதான்.... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ஷாருக்கான் படம்

இரண்டே நாளில் ரூ.200 கோடியை அள்ளிய பதான்.... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ஷாருக்கான் படம்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி இருக்கும் பதான் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 27 2023, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாலிவுட் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். 2018-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்த ஜீரோ படத்துக்கு பின், கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கான் ஹீரோவாக நடித்த படங்கள் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியாகி உள்ள படம் தான் பதான்.

24

ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதேபோல் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் கடந்த ஜனவரி 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... பட்டைய கிளப்பினாரா பாலிவுட் பாட்ஷா?... ஷாருக்கானின் பதான் படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ

34

வெளியானது முதலே பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் பதான் திரைப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி முதல்நாளிலேயே இப்படம் உலகளவில் ரூ.106 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல்நாளில் ரூ.100 கோடிக்கு மேல் கலெக்‌ஷன் அள்ளிய முதல் இந்தி படம் என்கிற சாதனையை இதன்மூலம் நிகழ்த்திக் காட்டியது பதான்.

44

இந்நிலையில், பதான் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நேற்று விடுமுறை தினம் என்பதால் முதல் நாளை விட அதிக கலெக்‌ஷனை அள்ளி உள்ளது இப்படம். பதான் திரைப்படம் இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.235 கோடி வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நேற்று இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... துணிவு வெற்றியால்... திடீரென கொள்கையை தளர்த்தினாரா அஜித்?... ஏகே ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் வெயிட்டிங்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved