துணிவு வெற்றியால்... திடீரென கொள்கையை தளர்த்தினாரா அஜித்?... ஏகே ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் வெயிட்டிங்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தன் மீது அளவில்லா அன்பு காட்டும் ரசிகர்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர், பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து இன்று தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான். அவர்கள் கொடுக்கும் அன்பு தான் அஜித்தை இந்த அளவு உயரத்தை எட்ட உதவியாக இருந்துள்ளது.
அஜித் தனது ரசிகர்கள் தனக்காக அமைத்த ரசிகர் மன்றத்தை கலைத்து உத்தரவிட்டாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் வெளியான துணிவு படத்துக்கு கூட ரசிகர்கள் அதிகாலைக் காட்சிக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து அஜித் மிரண்டு போனாராம். இவ்வளவு அன்பு காட்டும் ரசிகர்களுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம் அஜித்.
இதையும் படியுங்கள்... தினமும் சரக்கடிப்பேன், கணக்கே இல்லாம சிகரெட் பிடிப்பேன்... என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி லதா- ரஜினிகாந்த்
அதனால் தனது கொள்கையை அவர் தளர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரசிகர்களை இதுவரை சந்திக்காத அஜித், இனி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப்போவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர் மன்றம் கலைத்தது கலைத்ததாகவே இருக்கும் என்றும், சினிமாவில் உள்ள தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் ரசிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அவர் திட்டமிட்டுள்ளாராம்.
அஜித்தின் இந்த திடீர் மாற்றம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக உள்ளது. துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதால், தற்போது லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள அஜித், அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் போஸ்டர் குடியரசு தினத்தன்று வெளியீடு!