அப்பா நிச்சயம் பெருமைப்படுவார்... குடியரசு தினத்தன்று அக்காவுக்கு கிடைத்த விருதால் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிவகார்த்திகேயனின் அக்கா கெளரிக்கு தமிழக அரசு, சிறந்த மருத்துவர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த அவர், கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் ஹாட்ரிக் வெற்றியை நழுவவிட்டார். பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று அதற்காக விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கி இருந்தார் சிவகார்த்திகேயன்.
தற்போது அவர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... இரண்டே நாளில் ரூ.200 கோடியை அள்ளிய பதான்.... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ஷாருக்கான் படம்
இந்நிலையில், நேற்று குடியரசு தினத்தன்று சிவகார்த்திகேயனின் அக்காவுக்கு சிறந்த டாக்டர் விருது வழங்கப்பட்டு உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிவகார்த்திகேயனின் அக்கா கெளரிக்கு தமிழக அரசு, சிறந்த மருத்துவர் விருது வழங்கி கவுரவித்துள்ளதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள சிவகர்த்திகேயன், அதில் தனது அக்காவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “இந்த குடியரசு தினம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. சிறந்த மருத்துவருக்கான விருதை வென்றதற்கு வாழ்த்துக்கள் அக்கா. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பாவும் நிச்சயம் பெருமைப்படுவார். உன்னுடைய உழைப்பும், நேர்மையும் உன்னை இன்னும் பல உயரங்களுக்கு கொண்டு செல்லும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... துணிவு வெற்றியால்... திடீரென கொள்கையை தளர்த்தினாரா அஜித்?... ஏகே ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் வெயிட்டிங்