நடிச்சது ஒரே ஒரு விளம்பரம்.. அதன்பின் கோடி ரூபாய் கொடுத்தாலும் விளம்பரங்களில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பது ஏன்?
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிக்க கூடாது என்பதை ஒரு பாலிசியாக பின்பற்றி வருகிறார். அது ஏன் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமா பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, பல்வேறு கார்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களை தங்கள் கம்பெனி விளம்பரங்களில் நடிக்க வைத்து வருகின்றனர். இதற்காக அந்த நடிகர்களுக்கு கோடி கோடியாய் சம்பளமும் வழங்கி வருகின்றனர். சச்சின், தோனி போன்ற கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஷாருக்கான், சல்மான் கான் போன்ற முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வரை இவர்கள் இன்றளவும் ஏராளமான விளம்பரங்களில் நடித்து அதன்மூலம் கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றனர்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும் தொடர்ந்து இதுபோன்ற விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் அதிலிருந்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சற்று தனித்து விளங்குகிறார்கள் என்றே சொல்லலாம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, கமல் போன்ற நட்சத்திரங்கள் இதற்கு முன் ஒரு சில விளம்பரங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவற்றில் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டனர்.
மேற்கண்ட தமிழ் நடிகர்கள் எல்லாம் விளம்பரங்களில் நடித்து நாம் பார்த்திருப்போம், ஆனால் தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இதுவரை விளம்பரத்தில் நடித்து பெரும்பாலும் யாரும் பார்த்ததில்லை. இவரும் ஆரம்ப காலகட்டத்தில் பாம் கோலா என்கிற குளிர்பான விளம்பரத்தில் மட்டும் நடித்தார். அதேபோல் அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துள்ளார். அதுவும் சம்பளமே வாங்காமால் நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் பிறந்தநாள்... தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினிகாந்த்
ஆரம்ப காலகட்டத்தில் நடித்த ஒரே ஒரு குளிர்பான விளம்பரத்தை தவிர்த்து ரஜினி வேறு எந்த விளம்பரங்களிலும் தலைகாட்டியதே இல்லை. அவர் நினைத்தால் விளம்பரங்கள் மூலமே கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். ஆனால் தன்னால் எந்த விஷயமும் மக்களுக்கு தவறாக புரமோட் ஆகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு விளம்பரங்களில் நடிக்கவே கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைபிடித்து வருகிறார் ரஜினி.
இதுவரை ரஜினியை தங்களது விளம்பரங்களில் நடிக்கச் சொல்லி அணுகிய நிறுவனங்களில் பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ-வும் ஒன்று. தங்கள் நிறுவனத்திற்காக நடிக்க ரஜினிக்கு ரூ.200 கோடி வரை கொடுக்க அந்நிறுவனம் தயாராக இருந்ததாம். ஆனால் பணத்தை ஒரு பொருட்டாக கருதாத ரஜினி நோ சொல்லிவிட்டாராம். அதேபோல் பிரபல துணிக்கடை அதிபர் ஒருவர் தன் கடை விளம்பரத்தில் நடிக்க மூன்று நாளைக்கு ரூ.30 கோடி வரை தருவதாக கூறியும் தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்போடு மறுப்பு தெரிவித்தாராம் ரஜினி. இதுபோன்ற குணங்கள் தான் இவரை மக்கள் மத்தியில் சூப்பர்ஸ்டாராக நீங்கா இடம்பிடிக்க செய்துள்ளது.
இதையும் படியுங்கள்... பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல... ‘ஜெயிலர்’ ரஜினியின் மாஸான கேரக்டர் பெயரை வெளியிட்ட படக்குழு