பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல... ‘ஜெயிலர்’ ரஜினியின் மாஸான கேரக்டர் பெயரை வெளியிட்ட படக்குழு
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் விஜய்யின் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார். இதுதவிர மலையாள நடிகர் விநாயகன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ராக்கி பட ஹீரோ வஸந்த்ரவி ஆகியோரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... பிறந்தநாள் காணும் ரஜினிகாந்திற்கு மனதார வாழ்த்து சொன்ன தனுஷ் - வைரலாகும் டுவிட்டர் பதிவு
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை விரைவில் முடித்து வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருவதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட ரஜினிக்கு தாயுமானவனாக இருந்த உடுப்பிகாரர்! சூப்பர்ஸ்டாரின் அறியப்படாத மறுபக்கம்