பிறந்தநாள் காணும் ரஜினிகாந்திற்கு மனதார வாழ்த்து சொன்ன தனுஷ் - வைரலாகும் டுவிட்டர் பதிவு
தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர உள்ளதாக ஒரு தகவல் பரவி வரும் வேளையில், தற்போது தனுஷ், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ரஜினியின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ், ரஜினிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் மருமகனாக இருந்த தனுஷ், கடந்த ஜனவரி மாதம் அவரது மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் இருவரும் இன்னும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை என்று கூறப்படுகிறது. விவாகரத்து முடிவை அறிவித்த பின் தற்போது முதன்முறையாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட ரஜினிக்கு தாயுமானவனாக இருந்த உடுப்பிகாரர்! சூப்பர்ஸ்டாரின் அறியப்படாத மறுபக்கம்
தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர உள்ளதாக ஒரு தகவல் பரவி வரும் வேளையில், தற்போது தனுஷ், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஹாப்பி பர்த்டே தலைவா’ என பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர் ஆவார். ரஜினியை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டு வந்தது. இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவானால் அது நிச்சயம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் என்பது உறுதி. ஆனால் அந்த கூட்டணி நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... சமூக வலைத்தளத்தை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் காமென் டிபி! கெத்தாக நிற்கும் ரஜினிகாந்த்!