- Home
- Cinema
- அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் 2 பேவரைட் சீரியல்கள்! ரசிகர்கள் கவலை
அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் 2 பேவரைட் சீரியல்கள்! ரசிகர்கள் கவலை
டிஆர்பியில் போட்டிபோடும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களுக்கு மத்தியில் இரண்டு சேனல்களுமே இரு முக்கிய தொடர்களை முடிவுக்கு கொண்டுவருகின்றன.

TV serials
சினிமாவை போல சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்காரணமாகவே முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் இப்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு சீரியல்களுக்கான மவுசு கூடி விட்டது. தற்போது சினிமா ரேஞ்சுக்கு விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல்கள் உள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பிப் பார்க்கின்றனர்.
Tamil Serials
தமிழ் நாட்டை பொறுத்தவரை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் இரண்டு சேனல்களின் சீரியல்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்படி பல்வேறு வெற்றிகரமான சீரியல்களை ஒளிபரப்பி வரும் இந்த இரண்டு சேனல்களும் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருகின்றன. அந்த சீரியல்களுக்கான கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாம்.
இதையும் படியுங்கள்... சன் டிவி புது சீரியல்களை அடிச்சு பறக்கவிட்ட சிறகடிக்க ஆசை! இந்த வார டாப் 10 TRP விவரம்!
Iniya serial
அதன்படி சன் டிவியில் ஆல்யா மானசா நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த இனியா சீரியல் தான் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு வரை டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வந்த இனியா சீரியல் கடந்த சில மாதங்களாகவே டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்காததால் அதனை தற்போது முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
Muthazhagu
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முத்தழகு சீரியலும் முடிவுக்கு வருகிறது. இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகள் 850 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது. இந்த சீரியலில் வைஷாலி தனிகா, ஷோபனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிக்பாஸ் வருவதால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Tirupati Laddu: "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா"! அதுவும் திருப்பதி லட்டுல இப்படியா? இயக்குநர் மோகன்ஜி!