MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tirupati Laddu: "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா"! அதுவும் திருப்பதி லட்டுல இப்படியா? இயக்குநர் மோகன்ஜி!

Tirupati Laddu: "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா"! அதுவும் திருப்பதி லட்டுல இப்படியா? இயக்குநர் மோகன்ஜி!

Tirupati Laddu Animal Fat: திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 20 2024, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
tirupati laddu

tirupati laddu

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்துகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக எழுந்துள்ள சர்ச்சை தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்நிலையில், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது: ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார். திருமலை லட்டு தயாரிப்பில் இயற்கையாகவே சுத்தமான நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முந்தைய அரசும், டிடிடியின் ஆட்சிக் குழுவும் லட்டுவின் தரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது தங்களின் சொந்தத் தொழில் என்பது போல் நடந்து கொண்டனர். புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர் என பரபரப்பை குற்றச்சாட்டை முன்வைத்தார். இது திருப்பதி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

35
tirupati laddu

tirupati laddu

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ஒய்.எஸ்.ஆர் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி சுப்பா ரெட்டி அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த அளவுக்கும் செல்வார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும்.  நானும் எனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து சர்வ வல்லவரான அந்த ஏழுமலையான் முன் சத்தியம் செய்யத் தயாராக உள்ளோம். அதேபோல் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்: ஆய்வு அறிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி

45
tirupati laddu

tirupati laddu

இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிட்டார். அதில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் மற்றும் மாட்டுக் கொழுப்பும், மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும் உறுதியானது. இந்நிலையில், திருப்பதி லட்டு எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க என ஆவேசமாக மோகன்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து வெளியான சூப்பர் செய்தி! பள்ளிக்கல்வித் துறை!

55

இதுதொடர்பாக இயக்குநர் மோகன்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருப்பதி லட்டு எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சந்திரபாபு நாயுடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crop Insurance: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த 26 வகையான பயிர்களுக்கு ஜூலை 31 வரை காப்பீடு செய்யலாம்!
Recommended image2
Senthil Balaji: எதுக்கு இந்த பொழப்பு! இல்லைனா வழக்கு தான்! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜியின் தரமான பதிலடியும் எச்சரிக்கையும்!
Recommended image3
Now Playing
முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved