- Home
- Tamil Nadu News
- UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Tamil Nadu Government: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் 10 மாதங்களுக்கு உதவித்தொகை.

கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்கள் கல்வியை தொடர வேண்டும், உயர்கல்வியில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தின் படி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு 2027க்கு தயாராகும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஆண்டைப் போலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும் (Admission), இந்த மதிப்பீட்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.skilldevelopment.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து 18.07.2026 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வினை விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 3ம் தேதியாகும்.
* அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: ஜூலை 18
* ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: ஜூலை 18
*விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: ஆகஸ்ட் 03
*நுழைவுச் சீட்டு (Hall Ticket) வெளியீடு: ஆகஸ்ட் மூன்றாம் வாரம்
*தேர்வு நாள் மற்றும் நேரம்: செப்டம்பர் 06 (காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 வரை)

