சன் டிவி புது சீரியல்களை அடிச்சு பறக்கவிட்ட சிறகடிக்க ஆசை! இந்த வார டாப் 10 TRP விவரம்!
ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், இந்த வாரத்தின் டாப் 10 TRP பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
Serial TRP List
வெள்ளித்திரை படங்களுக்கு நிகராக, அதிக படியான ரசிகர்களால் சின்னத்திரை சீரியல்கள் இல்லத்தரசிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், குடும்ப கதை என்கிற வட்டத்தை தாண்டி சில சுவாரஸ்யமான அம்சங்களுடன் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இவை சின்னத்திரை தொடர்கள் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கிறது. அதே போல் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத சில ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் காட்சிகள் இடம்பெறுவது சீரியல்களின் தனி பலம் என்றே கூறலாம்.
Kayal and Singapennea Serial
இந்நிலையில் இந்த வாரம், அதாவது இந்த ஆண்டின் 37-ஆவது வாரத்தில்... ஒளிபரப்பான சீரியல்களில், டிஆர்பியில் டாப் 10 இடத்தை கைப்பற்றிய சீரியல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். "இந்த வாரம் 8.83 டிஆர்பி புள்ளிகளுடன், முதல் இடத்தை பிடித்துள்ளது 'கயல்' சீரியல். கயல் - எழில் திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆர்வமுடன் கார்த்திருக்கும் நிலையில், தற்போது கயல் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஆனால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை கடந்து இந்த திருமணம் நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்போம். இந்த சீரியலை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் 8.49 டிஆர்பி புள்ளிகளுடன் 'சிங்க பெண்ணே' சீரியல் உள்ளது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் எப்போது வெளியே வரும், ஆனந்தி அன்பு காதலை ஏற்றுக்கொள்வாரா? அல்லது மகேஷை திருமணம் செய்து கொள்வாரா ? என யூகிக்க முடியாத கதைக்களத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
Siragadikka Aasai Serial:
இந்த வாரம் டிஆர்பியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது, விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான 'சிறகடிக்க ஆசை' தொடர். தன்னுடைய தம்பி... சிட்டியுடன் பழகி தான் கெட்ட பழக்கங்களை கற்று கொள்கிறார் என்கிற ஆதங்கத்தோடு வந்து, மீனா சண்டை போட... சிட்டி அவரை தள்ளிவிட்டதில் மீனாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. மேலும் செல்வம் விஷயத்தில் மீனா சொன்னது தான் உண்மை என முத்து புரிந்து கொள்ள, விஜயாவுக்கு பரதநாட்டிய கிளாஸ் ரூபத்தில் வர உள்ள புது பிரச்சனை என்ன என்று சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், 8. 22 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.
Marumagal and Sundari Serial
இதை தொடர்ந்து துவங்கப்பட்டு சில மாதங்களிலேயே, டாப் 3 பட்டியலில் இடம்பிடித்த மூன்று முடிச்சு சீரியல் 8.11 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து கேபிரியல்லா நடித்து வரும், 'மருமகள்' சீரியல் 7.77 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. பிரபு கையில் ஆதிரையின் அப்பா கொடுத்த பணம், எப்படி வீட்டிற்கு வந்தது என்கிற புது குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், இதை எப்படி ஆதிரை கண்டுபிடிக்க போகிறார் எகிற ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீரியலுக்கு அடுத்தபடியாக, சுந்தரி சீரியல் 7.14 டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கார்த்தியின் சதி திட்டத்தை முறியடித்து, சுந்தரி - விஜய் திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என்றும், அதே போல் இந்த சீரியலும் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.
அது என் பர்சனல்! நேர்காணலில் மைக்கை தூக்கி போட்டுவிட்டு வெளியேறிய நடிகர் தனுஷ்!
Baakiyalakshmi, Pandian store, Malli and Chinnna marumagal
இந்த வாரம் டிஆர்பி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் ஃபேவரட் தொடரான பாக்கியலட்சுமி சீரியல். ராமமூர்த்தி மறைவால், சீரியல் கொஞ்சம் அழுகையுடன் சென்று கொண்டிருப்பதால் இந்த வாரம் கொஞ்சம் பின்தங்கி 6.75 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது. இந்த சீரியலை அடுத்து, விஜய் டிவியின் மற்றொரு ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டார் சீரியல் 6 .64 டிஆர்பி புள்ளிகளுடன், எட்டாவது இடத்தையும், சன் டிவியின் மல்லி சீரியல் 6. 51 டிஆர்பி புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த வாரம் டிஆர்பியில் 6.35 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியல்.