MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அது என் பர்சனல்! நேர்காணலில் மைக்கை தூக்கி போட்டுவிட்டு வெளியேறிய நடிகர் தனுஷ்!

அது என் பர்சனல்! நேர்காணலில் மைக்கை தூக்கி போட்டுவிட்டு வெளியேறிய நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் VIP 2 படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் கலந்து கொண்டபோது... அவரிடம் சில பர்சனல் கேள்விகளை தொகுப்பாளர் முன்வைத்ததை தொடர்ந்து, தனுஷ் நேர்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.  

2 Min read
manimegalai a
Published : Sep 19 2024, 03:15 PM IST| Updated : Sep 19 2024, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Actor Dhanush

Actor Dhanush

தமிழ் சினிமாவில், பன்முக திறமையாளராகவும் முன்னணி நடிகராகவும் அறியப்படுகிறார் நடிப்பு அசுரன் தனுஷ். இவர் சமீப காலமாக தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளை தாண்டி, சில ஹிந்தி படங்களில் ஹீரோவாக நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. கூடிய விரைவில் இவர் மூன்றாவதாக நடிக்க உள்ள ஹிந்தி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. அதே போல்... ஹாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு கூட கிடைக்காத சில வாய்ப்புகள் தனுஷுக்கு கிடைத்தது பல நடிகர்களை ஆச்சர்யப்பட வைத்தது என்றே கூறலாம்.
 

25
Actor Dhanush Direct and acting Raayan:

Actor Dhanush Direct and acting Raayan:

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அவரது 50-ஆவது படமான, ராயன் படத்தை நடிகர் தனுஷ் நடித்து... இயக்கி இருந்தார். இந்த படத்தில் இதற்க்கு முன்பு பார்த்திடாத ஒரு தனுஷை பார்க்க முடிந்தது. மொட்டை தலை, முரட்டுத்தனமான முக பாவனை என... துளியும் ஹீரோயிசம் இல்லாமல், இந்த மாதிரியான வேடங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்திருந்தார். அதே போல் தனுஷ் இந்த படத்தில் அதிகம் ஃபர்பாம்மென்ஸை வெளிப்படுத்தாமல், மற்ற இளம் நடிகர்களுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். இப்படம் ஒருதரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மாற்று தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

வனிதா விஜயகுமார் வீட்டில் நடந்த மிட் நைட் செலிபிரேஷன்! வைரலாகும் போட்டோஸ்!

35
Dhanush Next Direct with Arun Vijay

Dhanush Next Direct with Arun Vijay

அடுத்தடுத்து தன்னுடைய மற்ற படங்களில் நடிக்க பிசியாகி வரும் தனுஷ்... அருண்விஜய் மற்றும் நித்தியாமேனனுடன் சேர்ந்து ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தேனியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல் தன்னுடைய சகோதரியின் மகனை வைத்து, தனுஷ் இயக்கியுள்ள திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, 'குபேரன்' திரைப்படமும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

தனுஷ் பற்றிய தேடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது... தனுஷ் குறித்த ஃபிளாஷ் பேக் தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. 

45
Dhanush VIP 2 Movies

Dhanush VIP 2 Movies

அதாவது நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்து 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'வேலையில்லா பட்டதாரி 2'. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொண்வண்ணன், கஜோல் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, தனுஷ் பல புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில்... தனுஷ் டிவி9க்கு அளித்த பேட்டியின் போது, ​​தனுஷிடம் சுசி லீக்ஸ் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், தனது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். நான் என் படத்தில் பிஸியாக இருக்கிறேன், அதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை என்று தனுஷ் கூறியுள்ளார்.

அதிதியிடம் கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கினாரா சித்தார்த்? பயில்வான் கூறிய பகீர் தகவல்!

55
Suchi Leeks questions:

Suchi Leeks questions:

தொடர்ந்து தனுஷிடம் சுசி லீக்ஸ் பற்றி கேள்வி எழுப்பியதோடு, நீங்கள் இந்த சம்பவத்தால்... மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டதே என கூறிய நிலையில், திடீர் என கோவமடைந்த தனுஷ்... "நான் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று யார் சொன்னது? அதை யாரிடமாவது சொல்லியிருக்கிறேனா?" என்று கூறிய தனுஷ், தொகுப்பாளரிடம் கைதட்டி, "எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தனிப்பட்ட விஷயங்களை என்னிடம் சொல்வீர்களா? எல்லோருக்கும் தனியுரிமை என்று ஒன்று இருக்கிறது. நான் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது, இது ஒரு முட்டாள் தனமான நேர்காணல் என கூறி மைக்கை கழட்டி தூக்கி போட்டுவிட்டு வெளியேறினார்." பின்னர் சேனல் தரப்பிடம் இருந்து தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், தனுஷ் விருப்பமே இல்லாமல் 5 நிமிடம் மட்டுமே படம் குறித்து பேசிவிட்டு சேனலில்  இருந்து சென்றுள்ளார். 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved