MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வனிதா விஜயகுமார் வீட்டில் நடந்த மிட் நைட் செலிபிரேஷன்! வைரலாகும் போட்டோஸ்!

வனிதா விஜயகுமார் வீட்டில் நடந்த மிட் நைட் செலிபிரேஷன்! வைரலாகும் போட்டோஸ்!

வனிதா விஜயகுமார் தன்னுடைய வீட்டில், இரவு 12 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஸ்வஸ்திகா என்கிற தன்னுடைய தம்பி மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 19 2024, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் அறிமுகமாகி இருந்தாலும், இன்று தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் இவர் நடித்து வருவதற்கு முழு காரணம் இவரின் திறமை தான். 

தங்க தொட்டிலில் போட்டு வளர்க்கப்பட்ட விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகளான இவர்.. மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்னர், தன்னுடைய குடும்பத்தினராலேயே பட்ட கஷ்டமும், சந்தித்த பிரச்சனைகளும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. தன்னுடைய மகனை தன்னிடம் வைத்து கொள்ள வேண்டும் என, நீதிமன்றம் வரை சென்று போராடி சோர்ந்து போன வனிதா, மகள் ஜோவிகாவுடன் தான் தற்போது வசித்து வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

அதே போல் இவரின் இரண்டாவது கணவர் ஆனந்துக்கு பிறந்த மகள் ஜெயனித்தா... நீதிமன்ற உத்தரவின் படி தன்னுடைய தந்தையுடன் வசித்தாலும், பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே அம்மா வனிதா விஜய்குமாருடன் வந்து வாசிப்பார். ஊர் உலகத்திற்கு வனிதா ஒரு சண்டைகாரியாக தெரிந்தாலும், ஓர் சிறந்த அம்மாவாக இருக்க அவர் ஒருநாளும் தவறியது இல்லை.

வனிதா விஜயகுமார் வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கப்பை மிஸ் பண்ணினாலும்... திறமையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். மேலும் விஜய் டிவியில் அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர்... பின்னர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். 

அதிதியிடம் கோடிக்கணக்கில் வரதட்சணை வாங்கினாரா சித்தார்த்? பயில்வான் கூறிய பகீர் தகவல்!
 

34
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

கடந்த சில வருடங்களுக்கு முன்பு... வனிதா செய்து கொண்ட மூன்றாவது திருமணம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது மட்டும் இன்றி, சில சர்ச்சைகளுக்கும் வழி வகுத்தது. இரண்டே மாதத்தில் அந்த திருமண உறவில் இருந்து விலகிய வனிதா விஜயகுமார், பின்னர் கடந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு தன்னுடைய மகள் ஜோவிகாவை அனுப்பி வைத்தார். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய ஜோவிகா, பின்னர் மாயா கேங்கில் இணைந்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பட்டார்.

44
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

கூடிய விரைவில் ஜோவிகா ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது வனிதா விஜயகுமார் தன்னுடைய வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தன்னுடைய தம்பி பாலாவின் மகள் ஸ்வஸ்திகாவின் பிறந்தநாள் தன்னுடைய வீட்டில் இரவு கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என கூறி... அந்த குழந்தைக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹீரோயின் ஆசையில்.. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் குழந்தை நட்சத்திரம்! யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved