MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபல நடிகர் கடத்தல்; பணப்பறிப்பு கும்பலிடம் இருந்து சினிமா பாணியில் எஸ்கேப் ஆன ஷாக்கிங் சம்பவம்

பிரபல நடிகர் கடத்தல்; பணப்பறிப்பு கும்பலிடம் இருந்து சினிமா பாணியில் எஸ்கேப் ஆன ஷாக்கிங் சம்பவம்

Actor Mushtaq Khan Kidnapped : பாலிவுட்டில் ஸ்ட்ரீ 2, வெல்கம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரப்லாமான நடிகர் முஷ்டாக் கான் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 11 2024, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mushtaq Khan

Mushtaq Khan

ஸ்ட்ரீ 2 உட்பட பல பாலிவுட் படங்களில் நடித்த நடிகர் முஷ்டாக் கான் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட பின்னர், அவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளது. பிஜ்னூரில் பணம் பறிப்பு கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த அவர் இந்த கடத்தல் சம்பவம் குறித்து பிஜ்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முஷ்டாக்கை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரை கடத்தி இருக்கும் சம்பவம் பாலிவுட்டில் பீதியை கிளப்பி உள்ளது.

24
Stree 2 Actor Mushtaq Khan

Stree 2 Actor Mushtaq Khan

நடிகர் முஷ்டாக் கான் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கடத்தப்பட்டிருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரை அழைத்துள்ளனர். இதற்காக மும்பையிலிருந்து டெல்லி வந்த முஷ்டாக் கானை, விமான நிலையத்திலிருந்து ஒரு காரில் மீரட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீரட்டுக்கு பதில் டெல்லியின் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது தான் கடத்தப்பட்டதை உணர்ந்திருக்கிறார் முஷ்டாக் கான். அந்த கடத்தல் கும்பல், அவரை ஒரு வீட்டில் சுமார் 12 மணி நேரம் கட்டி வைத்திருக்கின்றனர். 

இதையும் படியுங்கள்... 2024-ல் கூகுளில் அதிகம் வலைவீசி தேடப்பட்ட டாப் 10 படங்கள்

34
Mushtaq Khan Kidnapped

Mushtaq Khan Kidnapped

அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்ற அந்த கும்பல் அவரை சித்திரவதை செய்திருக்கிறது. கடத்தல்காரர்கள் அவரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். பின்னர் அவரிடமிருந்த 2 லட்சத்தை பறித்துள்ளனர். முஷ்டாக் கானை கட்டி வைத்திருந்த இடத்தில், அவருக்கு தொழுகை நடத்தும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அருகில் ஒரு மசூதி இருப்பதை உணர்ந்த முஷ்டாக் கான், அங்கிருந்து தப்பிமசூதிக்குச் சென்று மக்களிடம் உதவி கேட்டிருக்கிறார். 

44
Mushtaq Khan Escaped

Mushtaq Khan Escaped

அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். பின்னர் பிஜ்னூர் காவல் நிலையத்தில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக  முஷ்டாக் கான் புகார் அளித்திருக்கிறார். அவரின் புகாரை ஏற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் கும்பலிடம் இருந்து மீண்டு வந்தது குறித்து முஷ்டாக் கான் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இவர் ஸ்ட்ரீ 2, வெல்கம், ஹம் ஹை ராஹி பியார் கே, ஆக்ரி குலாம் உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved