- Home
- Cinema
- சல்லடை போன்ற சேலையில்... கட்டழகை காட்டி அக்கா ஜான்விக்கே டஃப் கொடுக்கும் குஷி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
சல்லடை போன்ற சேலையில்... கட்டழகை காட்டி அக்கா ஜான்விக்கே டஃப் கொடுக்கும் குஷி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் இளைய மகள்... குஷி கபூர் தற்போது, நெட் சேலை அழகில் தூக்கலாக கவர்ச்சி காட்டி வெளியிட்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, பின்னர் தமிழில் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்தார். இவர் கதாநாயகியாக இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து இவரை படங்களில் புக் பண்ண இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.
கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த, ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பலருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: 'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள்!
பின்னர் மெல்ல மெல்ல பாலிவுட் பட வாய்ப்பை கைப்பற்றிய பின்னர், தொடர்ந்து ஹிந்தி படங்கள் நடிப்பதில் தான் கவனம் செலுத்தினார். அப்போது, இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இடையே காதல் உருவானது. இந்த காதல் திருமணத்திலும் முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகி குழந்தை மற்றும் குடும்பத்தை கவனித்து கொண்ட ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், சில படங்களில் தலை காட்ட துவங்கினார். அந்த வகையில் விஜய்யின் புலி படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: அசீமை அடிக்க செருப்பை கழட்டிய ஆயிஷா..! பிரச்சனையால் பற்றி எரியும் பிக்பாஸ் வீடு..!
குடும்ப உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி, பாத் டப்பில் குழுதுகொண்டிருக்கும் போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்பட்டது. இவரது இழப்பில் இருந்து மீண்டுள்ள இவரது குடும்பத்தினர்.
ஸ்ரீதேவியின் மூத்தமகளான ஜான்வி கபூர், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: 7 வருட மகிழ்ச்சியான அனுபவம்... 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பில் நயனுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்த விக்கி!
அக்காவுக்கே தற்போது டஃப் கொடுக்கும் விதத்தில், அவரது தங்கை குஷி கபூர் கவர்ச்சி சிலை போல் சல்லடை போன்ற சேலையிலும், விதவிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.